தமிழக அரசியல் களத்தில் விஜய் மற்றும் சீமான் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற கட்சியின் மூலம் விஜய் 2026 தேர்தலை குறிவைத்து அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார். இதே நேரத்தில், நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருகின்ற சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) வலுவான ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்களும், சீமான் ஆதரவாளர்களும் இடையே கடும் வாக்குவாதம், சில இடங்களில் சண்டையும் ஏற்படுகிறது. காரணம், “யார் உண்மையான தமிழர்?”, “யாருக்கு மக்கள் ஆதரவு அதிகம்?” என்ற விவாதம் தான். சீமான் ஆதரவாளர்கள், “விஜய் அரசியலுக்கு புதியவர். அவருக்கு அனுபவம் இல்லை” என்று குற்றம் சாட்டுகிறார்கள். மறுபுறம், விஜய் ரசிகர்கள், “விஜய்க்கு மக்களின் பேராதரவு உண்டு, 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம்” என்று கூறுகிறார்கள்.

இதனுடன், சீமான் மற்றும் விஜய் ஆகியோரின் அரசியல் பேச்சுகளும் அவரது ஆதரவாளர்கள் இடையே மேலும் பல்வேறு பிரச்சனைகளை தூண்டிவிடுகின்றன. சீமான், தனது உரைகளில் நேரடியாக தாக்கும் பாணியில் பேசுவதால் சர்ச்சை கிளம்புகிறது. இணையத்தில் தினமும் டிரெண்ட்டாகும் இந்த விவாதம், 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

யாருக்கு உண்மையான மக்கள் ஆதரவு அதிகம், யார் வெற்றி பெறுவார்கள் என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகே தெரிய வரும். நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மீடியாக்களில் பேட்டி அளித்த அவரது ரசிகர் பேச்சும், முழுமையாக அரசியல்படுத்தப்பட்ட சீமானின் தம்பியின் பேச்சும் என சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாணவன் ஒருவன் பேசும்போது, “நாம் தமிழர் ஆட்சி காலத்தில் கடலில் வீணாக கலக்கும் 2500 டிஎம்சி தண்ணீரை சேமித்து மக்களுக்கு பயன்படும் வகையிலும், கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாத வகையிலும் முப்போக விவசாயத்தை நாம் செய்யலாம். இதற்காக நாம் தமிழர் கட்சியும், தமிழ் தேசியமும் தேவை.

மூன்று மாதம் பெண் காவலர்களுக்கு மகப்பேறுக்கு முன்பு விடுமுறையும். அதேபோல அதற்கு பின்பு 6 மாதம் விடுமுறையும் நியமித்து விட வேண்டும் என்றால் நாம் தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழ் மொழி ஆனது வழிபாட்டு மொழியாக, பண்பாட்டு மொழியாக, ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை சிறுபான்மையினர் என்று சொல்லாதே. பெரும்பான்மையினர் என்று சொல்லு. 19 வயது உடைய சிறுவன் உங்களிடத்தில் அரசியல் பேசுவதற்கு நாம் தமிழர் கட்சியும், தமிழ் தேசியமும் இங்கு தேவை என்று பேசினார்.

அதனையொட்டிய மற்றொரு வீடியோவில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் பேசிய பொழுது, “சீமான் இனி தளபதி பத்தி பேச கூடாது. அவன் கூடிய சீக்கிரத்தில் சாவ போறான்” என்று குழந்தைத்தனமாகவும், விஷமத்தனமாகவும் பேசினார். தொடர்ந்து பேசிய அந்த சிறுவன், “ஏங்க இந்த மாதிரி காசு கொடுக்காம கூட்டத்தை கூட்ட முடியுமா? மரத்தை கட்டி பிடிச்சு பேசிட்டு இருக்காரு, தைரியம் இருந்தா இங்க வர சொல்லுங்க” என்று சில கூற முடியாத ஒருமை வார்த்தைகளையும் அந்த தவெக ஆதரவாளர் ஆன அந்த சிறுவன் பேசுகிறார்.

Scroll to load tweet…

தனது ரசிகர்கள் இன்னும் சிறுபிள்ளைத்தனமாக பேசிவருவது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தெரியுமா? இதுபோன்ற பேச்சுக்களை அவர் ஊக்குவிக்கிறாரா? கொள்கை, கோட்பாடு அல்லது அரசியல் என்றால் என்ன என்று தெரியாத தொண்டர்களை உருவாக்குவதே அவரது நோக்கமா? என்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் எழுப்புகின்றனர். இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது, முதலில் எந்த கட்சியாக அல்லது இயக்கமாக இருந்தாலும் சரி, அதற்கு அடிப்படை கொள்கை கோட்பாடு தான்.

அந்த கொள்கை கீழ்த்தரமாக விமர்சிக்கும் வகையில் இருக்க கூடாது. ஆனால் தவெக தொண்டர்கள் பலரும் கொள்கை சார்ந்து பேசாமல் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு இல்லாமல் ஒருமையில் பேசுவது, அரசியல்படுத்தாமல் வெறும் ரசிகர்களாக அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இதனை விஜய் கவனத்து தன் பின்னல் திரண்டிருக்கும் தொண்டர்களை ரசிகர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், அவர்களை அரசியல்படுத்தவேண்டிய தேவை விஜய்க்கு உள்ளது” என்று அறிவுறுத்துகின்றனர்.