- Home
- Tamil Nadu News
- 49 வருடங்களுக்குப் பிறகு.. எம்ஜிஆருக்கு அடுத்த தலைவன் விஜய்.. 12 மணி தாண்டியும் கூட்டம்…
49 வருடங்களுக்குப் பிறகு.. எம்ஜிஆருக்கு அடுத்த தலைவன் விஜய்.. 12 மணி தாண்டியும் கூட்டம்…
மக்கள் வெள்ளத்தால், நடிகர் விஜய் விமான நிலையத்திலிருந்து மரக்கடை வரை செல்ல ஏழு மணி நேரத்திற்கு மேல் ஆனது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மக்கள் கூட்டம் நள்ளிரவைத் தாண்டியும் காத்திருந்தது.

எம்ஜிஆருக்குப் பிறகு அடுத்த தலைவர்
திருச்சியில் தனது முதல் அரசியல் பிரச்சாரப் பயணத்தை நடிகர் விஜய் நேற்று தொடங்கினார். சாதாரணமாக 15 நிமிடங்களில் சென்று சேரக்கூடிய விமான நிலையத்திலிருந்து மரக்கடை வரையிலான தூரத்தை, மக்கள் வெள்ளம் காரணமாக அவர் கடக்க ஏழு மணி நேரத்திற்கு மேல் எடுத்தது. திருச்சி மட்டுமின்றி முழு தமிழகமும் அவரது முதல் பேச்சை கேட்க அவளுடன் காத்திருந்தது.
தளபதி விஜய்
மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு பிற்பகல் 3 மணிக்கு விஜய் மேடையேறி, சுமார் 18 நிமிடங்கள் பேசினார். “போரைச் செல்லும் முன் குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்வது போல, தேர்தலுக்கு செல்லும் முன் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன்” என்று அவர் தொடங்கினார். உரை, கூட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், திருச்சியில் தொடங்கும் எந்த முயற்சியும் திருப்புமுனை அமைக்கும் என்று வரலாற்று உதாரணங்களையும் பகிர்ந்தார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம்
அதன்பின் அரியலூரில் விஜய்க்கு கிடைத்த வரவேற்பு திருச்சியை போலவே பிரம்மாண்டமாக இருந்தது. வழியெங்கும் தொண்டர்களும் பொதுமக்களும் ஆரவாரமாக காத்திருந்தனர். இரவு நேரமாக இருந்தும், மக்கள் பெருந்திரளாக திரண்ட நிலையில், விஜய் மக்களிடம் பேசியபோது, “உங்களின் அன்பும் பாசமும் தான் எனக்கு மிகப்பெரிய செல்வம். அரசியலில் பணம் சம்பாதிக்க வரவில்லை, உங்களுக்காக உழைப்பதே எனது நோக்கம்” என்று உருக்கமாகக் கூறினார்.
விஜய் மக்கள் வெள்ளம்
பின்னர் விஜய், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பஸ் நிலையத்துக்குச் சென்றார். ஆனால் காலதாமதமாகிவிட்டதால், பஸ்சின் மேல் பகுதியிலிருந்து கைகளை அசைத்து மக்களை வாழ்த்தி விட்டு, உரையாற்றாமல் உள்ளே சென்றார். இருப்பினும், இரவு 12 மணி கடந்தும், சரியாக சொல்ல வேண்டும் என்றால் நள்ளிரவு 1 மணி வரை மக்கள் கூட்டம் குறையாமல் காத்திருந்தது அவருக்கான பேராதரவை வெளிப்படுத்தியது.
விஜய் மக்கள் கூட்டம்
ஒவ்வொரு இடத்திலும் விஜயைச் சந்திக்க மக்கள் திரண்டனர். அதே நேரத்தில், முகத்தில் சோர்வு காட்டாமல் மக்களை வரவேற்றார். தனது அரசியல் பயணத்தை எவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்கிறார் என்பதை காட்டியது. அடுத்த மூன்று மாதங்களில் விஜயின் அரசியல் திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர்
49 வருடங்கள் கழித்து எம்ஜிஆருக்கு பின் ஒரு கட்சி தலைவனுக்காக மக்கள் கூட்டம் நள்ளிரவு 12 மணியை தாண்டியும் காத்துகிட்டு இருந்துச்சுனு வரலாறுல எழுதுங்கடா என்று தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கொக்கரிக்கிறார்கள். நேற்று விஜய்க்கு ஆதரவாக கூடிய கூட்டம் தமிழக அரசியலில் புது திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என அனைத்து கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உண்டாக்கி இருக்கிறது என்று அரசியல் கூறுகின்றனர்.