- Home
- Tamil Nadu News
- என்னங்க பெரிய பணம்.. எல்லாத்தையும் பாத்தாச்சி.. உங்களுக்காக எதை வேணுனாலும் விட்டுட்டு வரலாம் - விஜய்
என்னங்க பெரிய பணம்.. எல்லாத்தையும் பாத்தாச்சி.. உங்களுக்காக எதை வேணுனாலும் விட்டுட்டு வரலாம் - விஜய்
அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை. மக்களின் அன்புக்காக எந்த வருமானத்தையும் தூக்கி எரியலாம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியைத் தொடர்ந்து அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசாரம் மேற்கொண்டார். திருச்சியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் பேசிய கருத்துகள் தெளிகாக கேட்காததால் அங்கு பேசியதை மீண்டும் ஒருமுறை பேசினார். முன்னதாக தனது உரையைத் தொடங்கும் முன்பாக, சாரி நண்பா, நண்பி கொஞ்சம் லேட் ஆயிடுச்சி மன்னிச்சிடுங்க என்று கூற, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உணர்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
உங்கள் அன்புக்காக எந்த உயரத்தையும் தூக்கி எரியலாம்
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “உங்களோட இந்த அன்புக்காக, எவ்வளவு பெரிய உயரத்தையும், வசதியையும், வருமானத்தையும் தூக்கி எரிந்து வரலாம். உங்கள் அன்பு, பாசத்தைவிட உலகில் எனக்கு எதுவும் பெரிது இல்லை. உங்கள் வீட்டில் ஒருவனாக, உறவினராக என்னை ஆக்கியுள்ளனர். சாதாரண என்னை தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள். என்னங்க பெரிய பணம்..? எல்லாத்தையும் பாத்தாச்சி. அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை. மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எரியலாம்.
ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் கட்டாதது ஏன்..?
தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் முதல் வரிசையில் காலம் காலமாக இருக்கிறது அரியலூர். இங்குள்ள சிமெண்ட், முந்திரி, பட்டாசு உற்பத்திகளை மேம்படுத்த இந்த அரசு நினைப்பதில்லை. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை முறையாக அரசு பராமரிக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணி மண்டபம் அமைக்காதது ஏன்? மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி கண்டுக்கதது ஏன்? ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம், சிதம்பரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று சொன்னது என்னாச்சி என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
போக்குவரத்துத்துறை அமைச்சரின் ஊரில் போதிய பேருந்து இல்லை
மேலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோதும் இந்த மாவட்டத்திற்கு போதிய பேருந்து வசதி இல்லாதது ஏன்? விஜய் தனியாளாக இருப்பான் என பார்த்தால், நாம் மக்கள் கடலுடன் இருப்பதைப் பார்த்து எதிரிகள் கண்ணா பின்னா என பேசுகிறார்கள்.
திமுக நம்மை நம்பவைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஏமாற்றுவதில் பாஜகவும், திமுக.வும் ஒரே வகையறா தான். அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, எது உண்மையோ, அதை தான் சொல்வோம். ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி தான் நம்முடைய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல்
2029ல் இவர்களின் ஆட்சி முடிவடையும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அப்போது மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது தானே தில்லுமுல்லு வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும். பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.