காலை உணவுத் திட்டத்தில் சிறுதானிய உணவு இல்லையா? அண்ணாமலைக்கு பதில் சொன்ன தமிழக அரசு!

ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

No millet in the breakfast plan? Tamil Nadu government replies to Annamalai sgb

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில் இட்லி, தோசை மட்டும் கொடுக்காமல் சிறுதானிய உணவுகளையும் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு அதற்கு பதில் அளித்துள்ளது.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "வெறும் சாப்பாடு, இட்லி, தோசை இல்லை... முட்டை, சிறு தானியங்கள் என ஊட்டச்சத்து உணவுகளும் பள்ளிகளில் வழங்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பெயர் மாற்றி, காலை உணவுத் திட்டம் என வைத்திருக்கிறார்கள் என்றும் குறை கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு ட்விட்டர் பதிவு ஒன்றில் அண்ணாமலைக்கு விளக்கம் அளித்துள்ளது.

ரவுடி பேபியைக்கொஞ்சுவது யார் தெரியுமா? குழந்தைப் பருவப் படங்களை வெளியிட்டு நன்றி சொன்ன நடிகை!

"தமிழ்நாடு அரசு வழங்கும் காலைச் சிற்றுண்டியில் தோசை, இட்லி வழங்கப்படுவதில்லை. சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளும் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிய உணவில் 5 நாட்களுமே முட்டை வழங்கப்படுகிறது. மேலும், ஒன்றிய அரசு நிர்ணயித்த கலோரிகள், புரதத்தை விடவும் அதிகமாகவே தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது" என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ள காலை உணவுத் திட்ட உணவுகளின் அட்டவணையும் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்ட மெனு:

திங்கள் ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை உப்புமா போன்ற உப்புமா வகைகள் காய்கறி சாம்பாருடன்
செவ்வாய்  ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை காய்கறி போன்ற கிச்சடி வகைகள்
புதன் ரவா பொங்கல் அல்லது வெண்பொங்கல் காய்கறி சாம்பாருடன்
வியாழன் சேமியா உப்புமா காய்கறி சாம்பாருடன்
வெள்ளி ஏதாவது ஒரு கிச்சடியுடன் ஒரு இனிப்பு

சொத்து ஆவணங்கள் விட்டதா? அசல் பத்திரம் தொலைந்து போனால் செய்ய வேண்டியது என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios