ரவுடி பேபியைக்கொஞ்சுவது யார் தெரியுமா? குழந்தைப் பருவப் படங்களை வெளியிட்டு நன்றி சொன்ன நடிகை!
நடிகை சாய் பல்லவி வெளியிட்டுள்ள குழந்தைப் பருவப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அந்தப் படத்தில் ரவுடி பேபியாக இருக்கும் சாய் பல்லவியைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவது யார் தெரியுமா?
Sai Pallavi with her father
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. கோத்தகிரியை சேர்ந்தவரான சாய் பல்லவி ஜார்ஜியாவில் மருத்தவம் படித்தவர். ஆனால், நடிப்பில் இருந்த ஆர்வத்தால் திரைத்துறையில் களம் இறங்கி சாதித்து வருகிறார்.
Sai Pallavi with her father
முதல் படமான பிரேமம் ஹிட் ஆனதும், தெலுங்கு சினிமாவுக்குத் தாவிய சாய் பல்லவி ஃபிடா, லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்கா ராய் போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
Sai Pallavi with her father
பின், தமிழில் மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிகரமாக இல்லை என்றால், அந்தப் படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் ட்ரெண்டானது. சாய் பல்லவியும் அந்தப் பாட்டில் வெற லெவல் எனர்ஜியுடன் ஆட்டம் போட்டிருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
Sai Pallavi with her father
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சாய் பல்லவி தனது இளமைப் பருவப் படங்களைப் பகிர்ந்துள்ளார். தன் தந்தையின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படங்களை வெளியிட்டுள்ள அவர் தன்னை உறுதியான பெண்ணாக வளர்த்த அப்பாவுக்கு நன்றி கூறியுள்ளார்.
Sai Pallavi with her father
"அன்பான அப்பா, எங்களுக்கு அமைதியான வாழ்க்கையை வழங்குவதற்காக, நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி! உங்கள் வலுவான கால்பந்து வீரர்களின் கால்களை எனக்குக் கொடுத்தது முதல் மிகவும் மென்மையும் வலிமையும் கொண்டவளாகவும் வளர்த்ததற்கு நன்றி. உங்கள் சிறந்த வாழ்க்கை எனக்கும் பூஜூவுக்கும் என்றென்று ஊக்கமளிக்கும்" என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.
Sai Pallavi with her father
சாய் பல்லவி பகிர்ந்துள்ள படங்களில் ஒன்றில், குழந்தையாக இருக்கும்போது சாய் பல்லவியை அவரது அப்பா தூக்கி வைத்துக் கொஞ்சுகிறார். கால்பந்து வீரரான சாய் பல்லவியின் அப்பா தனது அணி வீரர்களுடன் இருக்கும் இன்னொரு படத்தையும் சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.