சொத்து ஆவணங்கள் விட்டதா? அசல் பத்திரம் தொலைந்து போனால் செய்ய வேண்டியது என்ன?

அசல் சொத்துப் பத்திரம் தொலைந்து போனால் உடனே சில விஷயங்களைச் செய்வது முக்கியம். அசல் பத்திரத்துக்குப் பதிலாக நகல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

Apply online for Certified copies of documents with Registration Department of Tamil Nadu sgb

சொத்து பத்திரம் போன்ற முக்கியமான ஆவணங்களை அனைவரும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவதற்கு அடகு வைக்கும் சொத்தின் அசல் பத்திரம் தேவை. வங்கிக் கடன் பெறுவதற்கும் அசல் பத்திரம் கண்டிப்பாகத் தேவை.

ஒருவேளை அசல் சொத்துப் பத்திரம் தொலைந்து போனால் உடனே சில விஷயங்களைச் செய்வது முக்கியம். அசல் பத்திரத்துக்குப் பதிலாக நகல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

காவல் நிலையத்தில் புகார்:

சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டால் உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையையும் பதிவுசெய்ய வேண்டும். புகார் பதிவு செய்யும்போது, 'அசல் சொத்து ஆவணம் தொலைந்துவிட்டது' என்பதைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

 

குழந்தைகளுக்கு கண்டிப்பாக பான் கார்டு வேண்டுமா? எந்த வயதில் வாங்க வேண்டும்?

விளம்பரம் வெளியிடுதல்:

காவல் நிலையத்தில் FIR பதிவுசெய்துவிட்டு, நாளிதழில் பத்திரம் தொலைந்துபோனது பற்றி விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரத்தை தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும். தொலைந்துபோன ஆவணத்தில் உள்ள பெயர் முதலிய விவரங்களைக் குறிப்பிட்டு சொத்து விவரங்களையும் விளம்பரத்தில் தெரிவிக்க வேண்டும். தொலைந்த ஆவணங்களை யாரிடமாவது கிடைத்தால் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களும் விளம்பரத்தில் இருக்க வேண்டும்.

பங்குச் சான்றிதழ்:

தொலைந்துபோன் ஆவணம் ஹவுசிங் சொசைட்டி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்குச் சான்றிதழாக இருந்தால், மீண்டும் விண்ணப்பித்து அதைப் பெற்ற வேண்டும். விண்ணப்பிக்கும்போது காவல்துறையில் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல், செய்தித்தாள் விளம்பர நகல் முதலிய விவரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவாளர் அலுவலகம்:

சொத்து சம்பந்தப்பட்ட தகவல்கள், காணாமல் போன ஆவணங்கள், காவல்துறையில் பதிவுசெய்த எஃப்.ஐ.ஆர். நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பர நகல் ஆகியவற்றை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பதிவுசெய்த ஒப்பந்த சான்றிதழுக்கு நோட்டரி சான்றும் அளிக்கப்பட வேண்டும்.

ரவுடி பேபியைக்கொஞ்சுவது யார் தெரியுமா? குழந்தைப் பருவப் படங்களை வெளியிட்டு நன்றி சொன்ன நடிகை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios