விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கக்கட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணியுரியும்  முருகன் மற்றும் கருப்பசாமி  ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கடந்த முறை நிர்மலா தேவி நீதிமன்றத்துக்கு வந்தபோது, தன்னை தனது கணவரோ, உறவினர்களோ யாருமே வந்து பார்க்கவில்லை என நிருபர்களிடம் வருத்தப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நிர்மலா தேவி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது, அதே நிருபர்கள் அவரிடம் உங்களை யாரும் வந்து சந்தித்தார்களா என கேள்வி எழுப்பினர். அப்போது ஒரு சொந்தக்காரங்க கூட வந்து என்னை எட்டிப்பார்க்கல என கண் கலங்கினார்.

அவரது பேச்சு அங்கிருந்தவர்களை வருத்தமடையச் செய்தது. எப்படி இருக்க வேண்டிய ஒரு பேராசிரியை தற்போது இப்படி குற்றச்சாட்டில் சிக்கி தவிக்கிறாரே ? என்றனர்