கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த மரணங்கள் தொடர்பாக இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. ஆகையால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தவெகவினர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மற்றொரும் புறம் மாலை 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்ற விதி இருந்தும் ஒரே இரவில் 39 பேருக்கு அவசரமாக பிரேத பரிசோதனை செய்தது ஏன்? என பல்வேறு தரப்பிலும் மற்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறன்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. அதாவது 2021 நவம்பர் 15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்று இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது.