- Home
- Tamil Nadu News
- தலைவனை அசிங்க படுத்த விடமாட்டோம்..தீயா வேலை செய்யும் விஜய் ரசிகர்கள்.. திமுக ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு
தலைவனை அசிங்க படுத்த விடமாட்டோம்..தீயா வேலை செய்யும் விஜய் ரசிகர்கள்.. திமுக ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு
கரூர் பிரச்சார கூட்ட நெரிசலைத் தொடர்ந்து விஜய் மீது திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. விஜயை கொலை குற்றவாளியாக கைது செய்யக் கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், பதிலுக்கு தவெக தொண்டர்கள் அந்த போஸ்டர்களை கிழித்து வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகையால் மிரண்டு போயிருந்தது ஆளும் திமுக அரசு. அதுமட்டுமல்ல பிரச்சாரம், மாநாடு எதுவாக இருந்தாலும் திமுகவை கிழித்து தொங்கவிட்டார் விஜய். இதனால் தவெக தலைவர் மீது கடும் கோபத்திலும், ஆத்திரத்தில் இருந்து வந்தது. எப்போது சமயம் சந்தர்ப்பம் கிடைக்கும் என காத்திருந்த திமுகவுக்கு கரூர் சம்பவத்தை வைத்து விஜய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதாவது தவெக தலைவர் விஜய் கரூர் பிரச்சாரத்தின் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய் ரூ.20 லட்சம் இழப்பீடு
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் தெரிவித்தார். மேலும் திமுக அதன் கூட்டணி கட்சிகளும் இந்த 41 உயிரிழப்புக்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம். அவரை கைது செய்ய வேண்டும் கூறி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியான போதே அங்கிருந்து தவெக தலைவர் விஜய் சென்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
தமிழ்நாடு மாணவர் சங்கத்தினர்
இந்நிலையில் கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரச்சாரப் பரப்புரையில் அப்பாவி மக்கள் உயிர் பலி வாங்கி தப்பி ஓடிய விஜயை கொலை குற்றவாளியை கைது செய் என தமிழ்நாடு மாணவர் சங்கத்தினர் குளித்தலை, நாமக்கல் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதில் தமிழக அரசே 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய் என்று இடம் பெற்றுள்ளது.
தவெக தொண்டர்கள்
இந்நிலையில் நாமக்கல், குளித்தலை பகுதிகளில் திமுக ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் கிழித்து எரிந்து வருகின்றனர். மேலும் நாங்கள் இருக்கும் வரை எங்கள் தலைவர் மீது எவ்வளவு அவதூறுகளை பரப்பினாலும் எங்கள் தலைவரை அவ்வளவு எளிதில் வீழ்த்த விடமாட்டோம் என கூறி வருகின்றனர்.