- Home
- Tamil Nadu News
- 41 பேர் ப*யால் கண்ணீரில் தத்தளிக்கும் கரூர்! விஜய்யின் தவெக எடுத்த அதிரடி முடிவு!
41 பேர் ப*யால் கண்ணீரில் தத்தளிக்கும் கரூர்! விஜய்யின் தவெக எடுத்த அதிரடி முடிவு!
Karur Stampede: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சி தவெக தலைவர் விஜய்யை குற்றம்சாட்ட, எதிர்க்கட்சிகள் இது திட்டமிட்ட சதி என கூறுகின்றனர்.

கரூர் சம்பவம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தின் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 40 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய்
அதாவது திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் தவெக தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். ஆனால் எதிக்கட்சிகளான அதிமுக, பாஜக, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பல்வேறு விஷயங்களை எடுத்துக்கூறி ஆளும் கட்சியின் சதி வேலை என சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வருகின்றனர்.
அருணா ஜெகதீசன்
இந்த சம்பவம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சமும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ரூ.20 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனிடையே இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்ததை அடுத்து அருணா ஜெகதீசன் நேற்று மாலை முதல் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார்.
சி.டி. நிர்மல் குமார்
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் திட்டமிட்ட சதி என்று கூறிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்று பிற்பகல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த துயரச் சம்பவத்தைத் தேசிய மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் மனு அளித்துள்ளார்.