- Home
- Tamil Nadu News
- செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் 9 மணிக்கு இன்று மின்தடை!
செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் 9 மணிக்கு இன்று மின்தடை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், உடுமலைப்பேட்டை, தேனி, திருச்சி, மற்றும் ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பராமரிப்பு பணிகள்
மின்சாரம் இல்லாமல் வாழ்ந்த காலம் போய் தற்போது சிறிது நேரம் கூட மின்சாரம் இல்லாம் இருக்க முடிவதில்லை. தவிர்க்க முடியாத சூழல் காரணமாக கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.
மின் நிறுத்தம்
மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
பெரம்பலூர்
புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் 2 வரை மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டை
ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.
தேனி
தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை 10 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.
திருச்சி
தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியாம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் 4 வரை பவர் கட் செய்யப்படும்.
ராமாபுரம்
டி.வி.நகர், கிருஷ்ணவேணி நகர், லலிதாம்பாள் நகர், ரோஜாம்பாள் நகர், ஸ்ரீலட்சுமி நகர், கார்த்திக் பாலாஜி நகர், சபரி நகர், டி.எல்.எப்., குப்தா கம்பெனி, மவுண்ட் பூந்தமல்லி மெயின் ரோடு, கமலா நகர், ஸ்ரீராம் நகர், வெங்கடேஸ்வரா அவென்யூ, சுபஸ்ரீ நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.