மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரை விற்க பணிகள் மேற்கொள்ளும் படி மாநில வணிக நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

2 என்ஜின்கள் கொண்டபெல் 412 இ.பி. என்ற வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டரில் 11 நபர்கள் வரை அமர முடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரால் இந்த ஹெலிகாப்டரை பலமுறை பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் அவரது மரணத்திற்கு பிறகு கடந்த மார்ச மதம் கடைசியாக அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஹெலிகாப்டர் கடந்த 2006 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. ஜெயலலிதா சந்தித்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது கூட ஜெயலலிதா இந்த விமானத்தை தான் பயன்படுத்தினார்.

தற்போது இந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த  விமானம் தற்போது பழுதடைந்து உள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, தற்போது இந்த விமானம் பழுதடைந்து உள்ளதால், அதனை மீண்டும் சரிபார்க்க அதிக செலவாகும் என்பதால், உடனடியாக ஹெலிகாப்டரை விற்கும் பணியால் பணியை  மேற்கொள்ள மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரை விற்பதற்கு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் ஹெலிகாப்டர் விற்பனை நடைபெறும் என தெரிகிறது.