Seeman: அசத்திய சீமான்..8.9 % வாக்குகள் பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை தட்டி பறித்த நாம் தமிழர் கட்சி

நாடாளுமன்ற தேர்தலில் திமுக- அதிமுகவிற்கு போட்டி கொடுக்கும் வகையில் களம் இறங்கிய நாம் தமிழர் கட்சி  12 தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று 8.9 % வாக்குகளை அள்ளியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அடையாளத்தை பெறவுள்ளது.
 

Naam Tamilar Party will get the recognition of the Election Commission as it has got more than 8 percent votes in the election KAK

தேர்தலில் மக்களின் தீர்ப்பு

நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது. இன்ற திருவிழாவின் இறுதி நிகழ்வான வாக்கு எண்ணிக்கை பல கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதிகாரத்தில் இருந்த பாஜகவிற்கு செக் வைத்துள்ளது. தனிப்பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என நினைத்திருந்த பாஜகவிற்கு மக்கள் புறக்கணித்துள்ளனர். இதனால் கூட்டணி கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்த வரை 40க்கு 40 தொகுதிகளை வென்று திமுக கூட்டணி மீண்டும் சாதனை படைத்துள்ளது.

DMK : திமுக அலையில் சிக்கி காலியான அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் டெபாசிட்.!எத்தனை தொகுதிகளில் தெரியுமா?

கெத்து காட்டும் நாம் தமிழர் கட்சி

2004ஆம் ஆண்டு திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சிகளை வொயிட் வாஷ் செய்தது. தற்போது அதனை மீண்டும் நிகழ்த்திகாட்டியுள்ளது. திமுக- காங்கிரஸ் சுனாமி அலையால் எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக,நாம் தமிழர் ஆகிய கட்சிகள் டெபாசிட் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி அதிமுக மற்றும் பாஜகவிற்கு போட்டியாக வாக்குகளை வாங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி தஞ்சாவூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி,  பெரம்பலூர், தூத்துக்குடி, திருச்சி, திருவள்ளூர், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேலாக வாங்கியுள்ளது. 10 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகளையும் 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளையும்

அங்கீகாரத்தை பெறப்போகும் நாம் தமிழர்

அதேபோல கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருச்சி, ஈரோடு, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ம் இடத்தை பிடித்துள்ளது. இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் மொத்த வாக்கு மதிப்பு 8.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த முறை விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை சின்னம் பறிக்கப்பட்டு மைக் சின்னம் வழங்கியது. இந்த புதிய சின்னத்திலேயே அதிகளவு வாக்குளை குவித்திருப்பது அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனிடையே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற 8 சதவிகித வாக்குகள் பெற வேண்டும் தற்போது 8.9% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. 

இந்த 6 தொகுதிகளில் 3வது இடம்! 12 தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகள்! தமிழக அரசியல் அரங்கை அதிரவிடும் சீமான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios