- Home
- Gallery
- இந்த 6 தொகுதிகளில் 3வது இடம்! 12 தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகள்! தமிழக அரசியல் அரங்கை அதிரவிடும் சீமான்!
இந்த 6 தொகுதிகளில் 3வது இடம்! 12 தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகள்! தமிழக அரசியல் அரங்கை அதிரவிடும் சீமான்!
மக்களவைத் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 12 தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேலாக பெற்றது இல்லாமல் 6 தொகுதிகளில் 3ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

Lok Sabha Election Results 2024
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால், நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்து நின்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
Naam Tamilar Katchi
இதில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி 2ம் இடத்தை பிடித்துள்ளது. பாஜக 10 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் 4வது இடமும், ஒரு சில தொகுதிகளில் 3ம் இடமும் பிடித்து தமிழக அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது.
இதையும் படிங்க: திருவள்ளூர் தொகுதியில் வரலாற்றுச் சாதனை வெற்றி படைத்த காங்கிரஸ் வேட்பாளர்! யார் இந்த சசிகாந்த் செந்தில்?
Seeman
நாம் தமிழர் கட்சி தஞ்சாவூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், தூத்துக்குடி, திருச்சி, திருவள்ளூர், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேலாக வாங்கியுள்ளது.
இதையும் படிங்க: என்னுடைய பெயரிலேயே பல சுயேட்சைகள்.. கங்கணம் கட்டி தோற்கடிச்சுட்டாங்க.. தர்மத்தை மறக்காத ஓபிஎஸ்!
Election Results 2024
அதேபோல கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருச்சி, ஈரோடு, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ம் இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3ம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.