திமுக அரசு மற்றும் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

RB Udhayakumar: சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்: ஊரை சுற்றி வந்த ஊதாரி பிள்ளை ஊருக்கு உபதேசம் செய்வதை போல கடந்த நான்கரை ஆண்டு காலம் ஊரைச் சுற்றி வருவதே தன் ஒரே கடமை என ஊரை சுற்றி வந்து காலத்தை கடத்திய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஞானோதயம் பிறந்து அவதிப்படும் மக்களுக்கு அள்ளி, அள்ளிக் கொடுத்ததைப் போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விளம்பர வெளிச்சத்திலே இப்போது அவதிப்படும் தொண்டர்களுக்கு ஆறுதல் கூற அறிவாலயத்திலே புகார் பெட்டி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

சட்ட ஒழுங்கு சந்து சிரிக்கிறது

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மக்களிடம் வாங்கிய மனு எங்கே போனது? எதையும் நிறைவேற்றவில்லையே என்று விடை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் மனு கொடுத்த தமிழ்நாட்டு மக்கள். இன்றைக்கு மனு கொடுத்தால் சொத்து வரியை குறைத்து விடுவீர்களா? மின்சார கட்டணத்தை குறைத்து விடுவீர்களா? சட்ட ஒழுங்கு சந்து சிரிக்கிறதே அதைக் குறைத்து விட்டீர்களா? போதைப் பொருள் அதிகரித்து வருவதே அதை குறைத்து விடுவீர்களா? கடன் சுமையை குறைத்து விட முடியுமா? மடிக்கணினி திட்டத்தை வழங்குவீர்களா? கறவை மாடுகள்,ஆடுகள், தாலிக்குத் திங்கம் திட்டத்தை வழங்குவீர்களா? ஆண்டுதோறும் உயரும் ஆறு சகவீதம் மின்சார கட்டணத்தை குறைக்க முன் வருவீர்களா?அல்லது ஓட்டை உடைசல் பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து வாங்குவீர்களா? உங்கள் கூட்டணி கட்சியில் இருப்பவர்களை ஊழலை தடுக்க முடியாது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்து ஒப்புதல் வாக்கு பலம் கொடுத்திருக்காதே எதுவுமே செய்யாமல் எல்லாம் செய்தது போல விளம்பரம் செய்கிறீர்களே அதையாவது நிறுத்த முன்வருவீர்களா? அல்லது குடும்பத்திற்கு அதிகாரத்தை வாரி வாரி வழங்குவதில்லை இப்போது அவதிப்படும் தொண்டர்களுக்கு ஆறுதல் கூற அறிவாலயத்தில் புகார் பெட்டி மனு மீது நடவடிக்கை எடுப்பீர்களா? மனுவை எல்லாம் மண்ணோடு மண்ணோடாக செய்வீர்களா?

அரசு ஊழியர்கள் அதிருப்தி

ஆகவே அறிவாலயத்தில் புகார் பெட்டி வைத்து இன்றைக்கு இருக்கிற உழைக்கிற தொண்டர்களை எல்லாம் நீங்கள் மறுபடியும் ஏமாற்ற முயற்சி என எல்லோரும் தொண்டர்கள் பேசிக் கொள்வதாக செய்திகள் வருகிறது. ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் அதிருப்தி, திமுக தொண்டர்கள் அதிருப்தி, அரசு ஊழியர்கள் அதிருப்தி, மாணவர்கள் அதிருப்தி, விவசாயிகள் அதிருப்தி, பெண்கள் அதிருப்தி ஆனால் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே திருப்தியாக உள்ளது. மக்கள் உங்கள் ஆட்சியை விரும்பவில்லை. தொகுதி மறுவரையால் ஆபத்து என இல்லாத ஒன்றை பேயை மறைக்க புலியை காட்டி நீங்கள் மறைப்பது போல நீங்கள் ஆடிய நாடகம் எல்லோருக்கும் தெரியும், பிசாசை விரட்ட பூததை காட்டி நாடகம் ஆடியது எல்லோருக்கும் தெரியும். மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் இந்த நான்காண்டு கால ஆட்சியின லட்சணம்.

கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை

இதில் 98 சதவீதம் நிறைவேற்றிட்டோம் என்று என்று சொல்கிறீர்கள் நீங்கள் கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் உள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகள் உள்ளது. இனி உங்களுக்கு என்ன தான் வேண்டும் மக்களின் வாக்குறுதியை கூட நிறைவேற்ற மனம், ஆர்வம் ,அனுபவம், அறிவு கூட உங்களுக்கு இல்லை என தமிழ்நாட்டு மக்களின் கேள்வி எழுந்துள்ளது. ஸ்டாலின் நிர்வாக திறமையற்ற ஒரு பொம்மை முதலமைச்சராக யாரோ எழுதிக் கொடுப்பதை நடுக்கம் இல்லாமல் வாசிப்பதேஅவருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. கடைக்கோடி திட்டங்களை சேர்ப்பதில் 100% ஸ்டாலின் தோல்வி அடைந்து விட்டது தோற்றுப் போன ஆட்சிக்கு மக்கள் விருது வழங்க மாட்டார்கள் வெற்றி கோப்பை வழங்க மாட்டார்கள் தேற்றுப்போன ஸ்டாலின் அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகி வாட்டார்கள்.

எடப்பாடியாருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை

மடிக்கண்னி திட்டம், 2000 அம்மா மினிகிளினிக், குடிமாரமத்து திட்டம், 6 புதிய மாவட்டங்கள், பாரம்பரிய ஜல்லிக்கட்டு மீட்டி கொடுத்தது, தமிழகத்தின் கடன் சுமையை கட்டுப்படுத்தியது. அதேபோல தனியார் மூலம் வேலை வாய்ப்பு, வெள்ளை நிவாரணம் இப்படி பல்வேறு சாதனைகள் செய்ததால் மீண்டும் எடப்பாடியாருக்கு நல்ல தீர்ப்பு மக்கள் வழங்க உள்ளார்கள். இதை உளவுத்துறை மூலம் படித்து உதரல் ஏற்பட்டுள்ளது வசை பாடுவதை தனது கடமையாக உள்ளார் ஸ்டாலின். இன்றைக்கு எடப்பாடியாருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது இன்றைக்கு மத்திய தலைமை தெள்ளத் தெளிவாக மக்களுக்கு அறிவித்திருக்கிறது தேசிய கட்சியான பாஜக கட்சி தலைமை தெளிவாக அறிவித்து இருக்கிறது. டெல்லிக்கு தலைமை மோடிஜி அவர்கள் தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடியார் அவர்கள் தலைமையிலே மகத்தான மாபெரும் வெற்றி கூட்டணி, வலிமையான கூட்டணி, இதுல யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, மக்களுக்கும் சந்தேகம் இல்லை, எங்களுக்கும் சந்தேகமில்லை, எல்லோருக்கும் சந்தேகம் இல்லை.

மெகா கூட்டணி

ஆகவே சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ள, தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலே கருத்து சொல்வதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எடப்பாடியார் தலைமையில் தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலரும், எடப்பாடியார் தலைமையில் தான் மகத்தான கூட்டணி வெற்றி கூட்டணி வலிமையான கூட்டணி மெகா கூட்டணி இதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பு இதுதான். குழப்பமான எந்தவிதமான கருத்து மாறுவேறுபாடுஇல்லை அதற்கான தேவையும் இல்லை அதற்கான விவாதம் தேவை இல்லை தெளிவாக இருக்கிறோம். எடப்பாடியாரை முதலமைச்சராக முன்னிறுத்தி வாக்குகளை சேகரித்து மாபெரும் வெற்றி ஒரே இலக்கு, மக்கள் விரோத திமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும். ராமனாக எடப்பாடியாரை முன்னிறுத்தி திமுக என்கிற அசுரரை அந்த தீய சக்தியை வீழ்த்துகிறார். அந்த மகத்தான அம்பையை எழுதுவதற்கு காலம் கனிந்துவந்துவிட்டது கருத்துக்கு இதில் தடையில்லை. இதிலே எந்தவிதமான இடையூறும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.