- Home
- Tamil Nadu News
- இந்த கல்வியாண்டில் எத்தனை நாட்கள் பொது விடுமுறை? எந்த மாதத்தில் பள்ளிகளுக்கு லீவு அதிகம்!
இந்த கல்வியாண்டில் எத்தனை நாட்கள் பொது விடுமுறை? எந்த மாதத்தில் பள்ளிகளுக்கு லீவு அதிகம்!
2025-26ம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 210 வேலை நாட்கள் மற்றும் 21 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2025-26ம் கல்வியாண்டு நாட்காட்டி
விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளவில்லா சந்தோஷம் தான். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளிக் கல்வியின் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்த வேலை நாட்கள், பொது விடுமுறை எத்தனை நாட்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.
மொத்த வேலை நாட்கள்
அதில், 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பள்ளி வேலை நாட்கள் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை நாட்கள்
ஜூன் 7 பக்ரீத் பண்டிகை, ஜூலை 6 மொஹரம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 5 மிலாடி நபி, அக்டோபர் 1 ஆயுத பூஜை, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, விஜய தசமி, அக்டோபர் 20 தீபாவளி, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ், ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 14 பொங்கல் , ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் , ஜனவரி 16 உழவர் திருநாள், ஜனவரி 26 குடியரசு தினம், பிப்ரவரி 01ம் தேதி தைப்பூசம், மார்ச் 20 தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 21 ரம்ஜான், மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3 புனித வெள்ளி, ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்.
மொத்தம் 21 நாட்கள் பொது விடுமுறை
மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு, மார்ச் 31 ரம்ஜான், ஏப்ரல் 10 மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு/ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம், ஏப்ரல் 18 புனித வெள்ளி, மே 1ம் தேதி தொழிலாளர் தினம். 2025-26ம் கல்வியாண்டில் மொத்தம் 21 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. இதில், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது. அதுதவிர சனி, ஞாயிறு வார விடுமுறை 9 நாட்கள் வருகிறது.