ஜூலை மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான சூப்பர் தகவல்!
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகை உட்பட 8 நாட்கள் மட்டுமே விடுமுறை.

பள்ளி மாணவர்கள்
தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் கத்திரி வெயில் தொடங்கியது முதலே சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடைபெற்று வருகின்றன.
ஜூன் மாதம் விடுமுறை
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதலே எந்தெந்த மாதங்களில் பொது விடுமுறை வரப்போகிறது என்பதை பள்ளி மாணவர்கள் காலண்டரை புரட்ட ஆரம்பித்துவிட்டனர். அதன் படி ஜூன் மாதத்தில் பொது விடுமுறை என்று பார்த்தால் பக்ரீத் பண்டிகை மட்டுமே. அதுவும் சனிக்கிழமை வந்துவிட்டது. இதனால் சனி, ஞாயிறு வார விடுமுறை சேர்த்து மொத்தமாக பார்த்தால் ஜூன் மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.
ஜூலை மாதம் விடுமுறை
இந்நிலையில் ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை விரிவாக பார்ப்போம். அதாவது ஜூலை மாதத்தில் பொது விடுமுறை என்று பார்த்தால் 6ம் தேதி மொஹரம் பண்டிகை மட்டுமே வருகிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்று மொத்தமாக பார்த்தால் 8 நாட்கள் வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை வரும் மொஹரம் பண்டிகையும் அடங்கும்.
பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி
ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் போதிய விடுமுறை கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.