கோவையில் முதன் முறையாக நடமாடும் அழகு நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் நாம் வெளியில் சென்று எதையும் தேட வேண்டியதில்லை. போன் நம்பரை அழுத்தி ஆர்டர் செய்தாலே போதும். அடுத்த வினாடி அனைத்தும் நம்மிடம்...

அந்த வகையில் மளிகை பொருட்கள, உணவு வகைகள், மருந்து பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்தும் போன் செய்தால் போதும் நம்மை
வந்தடையும்.

அதேபோல், சலூன் சென்றுதான் நம்மை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்லை. போன் செய்தால் போதும் நடமாடும் சலூன் நம் வீட்டைத் தேடி வரும். ஆம். கோவையில் தற்போது நடமாடும் அழகு நிலையத்தை உருவாக்கி உள்ளார் ஸ்ரீதேவி என்பவர். 

க்யூ3 சலூன் என்ற பெயரில் இந்த அழகு நிலைய வாகனம் கோவை முழுவதும் வலம் வருகிறது. வீட்டுக்கே வந்து இவர்கள் சேவை செய்வதால், இதற்கு நல்ல
வரவேற்பு கிடைத்துள்ளது.

வீட்டிலேயே இருந்து கொண்டு தமக்கு தேவை ஏற்படும்போது, நடமாடும் சலூனை அழைத்து ஷேவிங், சிகை அலங்காரம் உள்ளிட்ட அனைத்தையும் நாம் செய்து கொள்ளும் வகையில் இந்த நவீன வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் அழகு நிலையத்தில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் பலரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வதாகவும், குறிப்பாக திருமண வீடுகளுக்கு இந்த வாகனம் அதிகம் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்.