இளம் வயதிலேயே 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் கில்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.
Gujarat Titans, IPL 2024
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் தொடரில் ஒரு அணியாக இடம் பெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த சீசனில் சுப்மன் கில் விளையாடிய 16 போட்டிகளில் 483 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டி வரை வந்தது.
Gujarat Titans Captain Shubman Gill
இதில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 214/4 ரன்கள் குவித்தது. பின்னர், பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 171/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் பெய்த கன மழையின் காரணமாக சிஎஸ்கே வெற்றிக்கு டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சிஎஸ்கே த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.
Shubman Gill
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதைத் தொடர்ந்து சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்தது.
Shubman Gill 100th IPL 2024
எஞ்சிய 6 போட்டிகளில் 3 வெற்றி பெற்றால் கூட குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பு இழக்கும் நிலை நேரிடும். இந்த நிலையில் தான் சுப்மன் கில் இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். இதுவரையில் 99 போட்டிகளில் விளையாடிய கில் 3 சதங்கள், 20 அரைசதங்கள் உள்பட 3088 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், அதிகபட்சமாக 129 ரன்கள் எடுத்துள்ளார்.