Udhayanidhi Stalin Campaign : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

2024 ஏப்­ரல் 19 அன்று நடை­பெற உள்ள நாடா­ளு­மன்­றத் தேர்­த­லை­யொட்டி, தமிழ்­நாடு முழு­வ­தும் இந்­தியா கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தேர்­தல் பிரச்­சா­ரம் செய்து வரு­கி­றார் திமுக தலைவர் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின். அதேபோல திமுகவினர் மற்­றும் கூட்­டணி கட்­சி­யினரும் தேர்­தல் பணி­களை தீவி­ர­மாக மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

நெல்லை மற்­றும் கன்­னி­யா­கு­மரி மக்களவை தொகு­தி­களில் போட்­டி­யி­டும் இந்­தியா கூட்­டணி வேட்பாளர்களை ஆத­ரித்து நெல்லை மாவட்­டம் நாங்­கு­நேரி சுங்­கச்­சா­வடி அருகே இன்று (மார்ச் 25) மாலை நடை­பெ­றும் மாபெ­ரும் தேர்­தல் பிரச்­சார பொதுக்கூட்­டத்­தில் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் கலந்­து­கொண்டு வேட்­பா­ளர்­களை அறி­மு­கம் செய்து வைத்து உரை­யாற்­று­கி­றார்­.

தம்பி நீங்களா.! எதிரே வந்த கேப்டன் மகன்.. வாழ்த்து சொன்ன ராதிகா.. சரத்குமார்.. விருதுநகரில் ஆச்சர்யம்.!!

இந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள், அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த திமுகவின் மாவட்ட நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர், ஆதரவு இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்கின்றனர். திமுக இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்று மாலை 5 மணி முதல் காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

நேற்று மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சு. வெங்கடேசனை ஆதரித்து வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அவர் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து தமிழக மாணவர்களின் கற்றல் திறனை மத்திய பாஜக அரசு குறைக்க ஆவணம் செய்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 

இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலம் ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பில் உள்ள பொதுத்தேர்வுகள், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிலும் கொண்டு வரப்படும் என்றும், இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் மாநில உரிமைகளை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், மத்திய அரசு சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை வளர்க்க மட்டுமே பணம் செலவிட்டு வருவதாகவும், தமிழ் மொழியை வளர்க்க இதுவரை ஒரு ரூபாய் கூட அவர்கள் செலவிடவில்லை என்றும் குற்றம் சாட்டினார். 

அமைச்சர் நேரு எனக்கு அப்பா மாதிரி; வேட்புமனு தாக்கலுக்கு பின் துரைவைகோ எமோஷனல்