தம்பி நீங்களா.! எதிரே வந்த கேப்டன் மகன்.. வாழ்த்து சொன்ன ராதிகா.. சரத்குமார்.. விருதுநகரில் ஆச்சர்யம்.!!
இன்று ஒரே நாளில் காங்கிரஸ், தேமுதிக, பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அப்போது தேமுதிக மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவரையொருவர் பரஸ்பரமாக நலம் விசாரித்துக் கொண்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி செலிபிரெட்டி தொகுதியாக மாறியிருக்கிறது.
திமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக உள்ள மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அக்கட்சி சார்பில் கேப்டன் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் நடிகை ராதிகா வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இன்று வேட்புமனு தாக்கலின்போது, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமாரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டு நலம் விசாரித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் நடிகர் சரத்குமாரும் கைகுலுக்கி பேசிக் கொண்டனர். ராதிகாவுக்கு மாற்று வேட்பாளராக சரத்குமாரும் மனு தாக்கல் செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..