அமைச்சர் நேரு எனக்கு அப்பா மாதிரி; வேட்புமனு தாக்கலுக்கு பின் துரைவைகோ எமோஷனல்
மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுக்கு தற்போது வரை சின்னம் ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்துவதாக துரைவைகோ குற்றம் சாட்டி உள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோ, தனது வேட்புமனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் தாக்கல் செய்தார். அவருடன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், திமுக மாநகரச செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் உடன் சென்றனர்.
உறுதிமொழி வாசித்த போது 'ஆண்டவன் மீது ஆணையாக' என்று துரை வைகோ உறுதிமொழி எடுத்துக் கொண்டார். திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை நான் மறந்து விட்டேன். எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி என்ற ஒரே இலக்கு மட்டும் தான்.
ஆன்மிகமும், அரசியலும் பிரிக்கக் கூடாதவை; மருதாச்சல அடிகளாரிடம் ஆசிபெற்ற பின் அண்ணாமலை பேட்டி
அதை நோக்கி தான் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம். எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. அமைச்சர் நேரு அவரது மகன் அருண் நேருவை போலவே என்னையும் ஒரு மகனாக நினைக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் வரை வந்து என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். நேற்று நடந்த சம்பவம் குறித்து வைகோவிடம் எதுவும் நான் பேசவில்லை.
திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு சின்னங்கள் ஒதுக்கவில்லை. இதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். நாளைக்குள் உரிய முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அமலாக்கத்துறை, சிபிஐ போன்றே தேர்தல் ஆணையமும் ஜனநாயக படுகொலையை நடத்துகிறது என்றார்.