மாற்றுத்திறனாளின்  திருமணத்திற்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமணம் செய்ய விரும்புவர்களுக்கு நான்கு கிராம் தாலி, கை கடிகாரம், புத்தாடை மற்றும் சீர்வரிசைகள்  தாய் வீட்டு சீதனமாக அளிக்கப்படும் என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம்

சென்னை கோபாலபுரத்தில் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சார்பில் 12 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் திருமண சுயம்வரம் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆயிரம் விளக்கு பகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இன்று கீதா பவனில் நடக்கும் சுயம்வரத்தில் தேர்வாகி உள்ள நபர்களுக்கு வருகின்ற செப்டெம்பர் 4 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மேலும் கலந்தாய்விற்கு பின் தேர்வானவர்களுக்கு வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி அன்று இந்து முறைப்படி திருமணம் நடத்தப்படுகிறது. மேலும் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 145 வகையான சீர்வரிசைகள் கீதா பவன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட உள்ளது.

4 கிராம் தங்கம்- தாய் வீட்டு சீதனம்

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வருகின்ற நவம்பர் 19 ஆம் தேதி கீதா பவன் அறக்கட்டளை சார்பில் 60 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது, அதற்கான திருமண சுயம்வரம் தற்போது நடைபெற்ற வருகிறது, தம்பதியாக மட்டுமல்லாமல் தாயாகவும் தகப்பனாகவும் இருக்க வேண்டும் என்று அனைத்து ஜோடிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 1000- த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த அறக்கட்டளை மூலம் திருமணம் நடைபெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமணம் செய்ய விரும்புவர்களுக்கு நான்கு கிராம் தாலி, கை கடிகாரம், புத்தாடை மற்றும் சீர்வரிசைகள் என அனைத்தையும் தாய் வீட்டு சீதனமாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக சேகர்பாபு தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிச்சயம் விலக்கு -திருச்சி சிவா அதிரடி