இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிச்சயம் விலக்கு -திருச்சி சிவா அதிரடி

1989ல் சட்டப்பேரவையில் என்ன நடந்தது? என்பதை அப்போது ஜெயலலிதா உடன் இருந்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 

Trichy Siva has said that Tamil Nadu will definitely get exemption from NEET once the India coalition comes to power

மாநிலங்களவை கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இது தொடர்பாக திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், மணிப்பூரில் இன்னமும் பல்வேறு விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகிறத. அது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகவும் இருந்தது. எல்லா விவாதங்களையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். பிரதமர் அவைக்கு வராமல் உள்துறை அமைச்சர் மூலமாக விளக்கம் அளிக்க முயன்றதால் அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.  ஒரு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதை அறிமுகப்படுத்திய பின்னர்,

Trichy Siva has said that Tamil Nadu will definitely get exemption from NEET once the India coalition comes to power

அது தொடர்பாக விவாதிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் தான் அந்த மசோதா நிறைவேற்றப்படும்.  ஆனால் அவசரகதியில் அந்த சட்ட மசோதா அறிமுகம் செய்த பட்ட அன்றே சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதுபோல் அவசரகதியில் 42 மசோதாக்கள் திருத்தப்பட்டுள்ளது. பிரதமர்  நாடாளுமன்றம் வருகிறார்.  அலுவலகத்திற்கு வருகிறார்.  ஆனால் அவைக்கு வருவதில்லை. எதிர்க்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை முடக்குவதாக ஆளும் கட்சி தெரிவிக்கிறது. திமுகவின் தலைவரின் முயற்சியால் எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் விளைவுகளை நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் மணிப்பூரில் பறி போய்க்கொண்டிருக்கின்ற உயிர், காடுகளிலே தங்கி இருக்கின்றார்கள்.  

Trichy Siva has said that Tamil Nadu will definitely get exemption from NEET once the India coalition comes to power

எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை,  அடுத்த நாட்டின் எல்லைக்கு வந்தால் தப்பித்தோம் என்று நினைத்தோம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.  தமிழ்நாட்டில் இருக்கும் எங்களுக்கு ஏன் வலி.  காலில் அடிபட்டால் கண்ணீர் கசிவது போல,  மணிப்பூர் மக்களுக்காக இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் குரல் கொடுத்தன. நாடாளுமன்றத்தில் பிரதமர் உள்துறை அமைச்சர் ஆகியோர் ஒரு மாநில கட்சியான திமுகவை விமர்சிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அச்சம் திமுகவை பார்த்து தான். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை, எடப்பாடி பழனிசாமி என்பவரை யாருக்குமே தெரியாது, 1989ல் சட்டப்பேரவையில் என்ன நடந்தது? என்பதை அப்போது ஜெயலலிதா உடன் இருந்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என தெரிவித்தார்.

Trichy Siva has said that Tamil Nadu will definitely get exemption from NEET once the India coalition comes to power

பாஜக அரசு எதை கொண்டு வந்தாலும் அதை கண்மூடிதனமாக அ தி மு க  ஆதரிக்கின்றது கட்சியின் கொள்கை என்பது வேறு கூட்டணி என்பது வேறு என்ற புரிதல் கூட அவர்களுக்கு கிடையாது பாஜகவும் அமிர்தாவும் எதைக் கொண்டு வந்தாலும் ஆதரிப்போம் என கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றனர். ஆளுநர் நீட் விவகாரத்தில் இன்றைக்கு நேற்று மட்டுமில்லை எப்போதும். முன்னுக்கு முரணாக பேசிவருகிறார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு அளிக்கப்படும். யார் ஆட்சிக்கு வரவேண்டும் எனபதை விட யார் ஆட்சிக்கு வர கூடாது  என்பது தான் முக்கியம் . வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் எனவும் தெரிவித்தார்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios