2000 ஆடு, 5000கோழி தடபுடலாக நடைபெற்ற அமைச்சர் வீட்டு கல்யாண விருந்து.! அதிமுகவினரையே மிஞ்சிய மூர்த்தி
தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியின் மகனின் திருமண நிகழ்வில் 2000 ஆடுகள், 5000கோழிகள் என தடபுடலாக நடைபெற்ற விருந்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். திருமணத்தை விட கறிவிருந்து தான் ஹாட் டாப்பிக் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா நேற்று முன்தினம் நடைபெற்றது,மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இது திருமண விழா அல்லாமல் மண்டல மாநாடு என குறிப்பிட்டிருந்தால் பொறுத்தமாக இருந்திருக்கும் என தெரிவித்தார். அமைச்சர் மூர்த்தி பொதுக்கூட்டம் , அரசு நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மிகப்பிரமாண்டமாக தான் செய்வார், தனி முத்திரை பதிப்பார், பி்ரமாண்டத்தை பதிப்பார்,
அதனால் மகனின் திருமணத்தை கட்சிக்கு பயன்பட வேண்டும், கட்சியின் ஆட்சியின் சாதனை தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திருமணத்தை நடத்தியுள்ளார், ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்பட கூடியவர் பி.மூர்த்தி என தெரிவித்தார். மேலும் மூர்த்தி பெருசா கீர்த்தி பெருசா என கேள்வி எழுப்பினால் எனக்கு கீர்த்திலாம் தெரியாது ஆனால் எனக்கு மூர்த்தி தான் பெரியதாக தெரிகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது உண்மைதான் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்பட கூடியவர் என்பதை தனது மகன் திருமண நிகழ்ச்சி மூலம் மதுரையில் அமைச்சர் மூர்த்தி நிகழ்த்தி காட்டியுள்ளார். பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. கலைஞர் அரங்கம் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமான கோட்டையும் அமைக்கப்பட்டிருந்தது.
இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சியோடு நடைபெற்ற திருமணத்தில் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல், ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் அமரும் வகையில் சாப்பாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்வுகாண்போரை அதிசயிக்கவைத்தது. மேலும் மொய் பணத்தை வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் 50 ஹைடெக் கவுன்ட்டர்களும் அமைக்கப்பட்டிருந்தது. திருமண நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு தனித்தனியாக அசைவமும், சைவமும் பிறமாறப்பட்டது. மேலும் பல வகையான இனிப்புகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக அசைவ விருந்துக்காக 2,000 ஆடுகள், 5,000 கோழிகள் மூலம் பிரியாணி உள்ளிட்ட அசைவ வகைகள் பரிமாறப்பட்டன. திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.
இதையும் படியுங்கள்
ஓபிஎஸ் சுற்றுப்பயணம் ...? கோபமடைந்த செல்லூர் ராஜூ..! போங்கப்பா பேட்டியே வேணாம்...