Asianet News TamilAsianet News Tamil

அதிமுக எம்எல்ஏக்களே இபிஎஸ் உடன் பேசுவதில்லை.. இந்த புருடா விடுற வேலை எல்லாம் இங்க வேணாம்-மு.க.ஸ்டாலின் கிண்டல்

அதிமுக தலைவர்களோடு திமுக எம்.எல்ஏக்கள் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி புருடா விடுகிறார், அம்மையார் மறைவிற்கு பின் அனைத்து தேர்தலிலும்  தோல்வியடைந்துள்ளனர். அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போயுள்ளது  என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Chief Minister M K Stalin has criticized Edappadi Palaniswami as lying
Author
First Published Sep 9, 2022, 2:07 PM IST

மூர்த்தி படிக்காதவர் கோபக்காரர்

 திருமண விழா அல்லாமல் மண்டல மாநாடு என குறிப்பிட்டதிருந்தால் பொறுத்தமாக இருந்திருக்கும், அமைச்சர் மூர்த்தி பொதுக்கூட்டம் , அரசு நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மிகப்பிரமாண்டமாக தான் செய்வார், தனி முத்திரை பதிப்பார், அதனால் மகனின் திருமணத்தை கட்சிக்கு பயன்பட வேண்டும், கட்சியின் ஆட்சியின் சாதனை தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திருமணத்தை நடத்தியுள்ளார், ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்பட கூடியவர் பி.மூர்த்தி, அமைச்சரவை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மூர்த்திக்கு அமைச்சர் வழங்குவதாக முடிவெடுத்தோம், அப்போது படிக்காதவர், கோபக்காரர் எப்படி அமைச்சர் வழங்குவதை யோசித்து அச்சத்தோடு வணிகவரித்துறையை கொடுத்தோம்,  அச்சப்பட்டோம் ஆனால்  பொறுமையின் சிகரமாக மாறி சிறப்பாக செயல்படுகிறார்., 
இப்போது நிதிச்சுமை உள்ளது, தற்போது வணிக பதிவுத்துறை வரலாற்றில் 13ஆயிரத்தி 913 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, 

Chief Minister M K Stalin has criticized Edappadi Palaniswami as lying

இந்தியா ஒற்றுமை 3 ஆம் நாள் பயணம்.. ராகுலை சந்தித்த வில்லேஜ் குக்கிங் யூடியூப்... என்ன பேசினார்கள் தெரியுமா..?

பத்திர பதிவில் சாதனை

பத்திர பதிவு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை, திங்கள் தோறும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது, சார் பதிவாளர் அலுலவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கான வசதி, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து்வந்து அலுவலகங்களில் உயர மேடை நீக்கியது,  நமது திராவிட மாடல் ஆட்சியில்தான், போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்காக சட்ட திருத்தம் குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இது போன்ற சாதனை செய்யப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்கள் இது குறித்து கேட்கின்றனர். மூர்த்தி பெருசா கீர்த்தி பெருசா என கேள்வி எழுப்பினால் எனக்கு கீர்த்திலாம் தெரியாது ஆனால் எனக்கு மூர்த்தி தான் பெரியதாக தெரிகிறார். மக்கள் நம்பை நம்பி அளித்த நமபிக்கைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவருகிறோம் எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பயன்பெறும் வகையில் எங்கள் பணி இருக்கும் என கூறியதுபோல நிறைவேற்றிவருகிறோம்,

Chief Minister M K Stalin has criticized Edappadi Palaniswami as lying

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு..! காரணம் என்ன தெரியுமா..?

இபிஎஸ் பதவி டெம்ப்ரவரி பதவி

மக்களுக்கு நம் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. மதுரையில் மாபெரும் கலைஞர் நூலகம் 75சதவீத பணி நிறைவு, ஜல்லிக்கட்டு மைதான பணி, கீழடி பண்பாட்டு அரங்கம், பெருநகராட்சி குழுமம், சுற்றுவட்ட சாலை, மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங், தமுக்க மாநாட்டு மையம், பாதாள சாக்கடை அமைப்பு பணி, ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அனைவரும் ஓயாமல் மக்கள் பணி ஆற்றிவருகிறோம், AM , PM பாக்காத சிஎம் என MM CM ஆக இருக்க வேண்டும் மினிட் டூ மினிட் சிம் ஆக இருக்க ஆசை அப்படி இருந்து CM நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என பாடுபடுகிறோம்,

 திமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடியுடன் பேசுவதாக கூறுகிறார், அவருடைய எம்.எல்ஏக்களே அவருடன் பேசுவதில்லை, திமுக எம்.எல்ஏக்கள் பேசுவதாக புருடா விடுகிறார், அம்மையார் மறைவிற்கு பின் அனைத்து தேர்தலிலும்  தோல்வியடைந்துள்ளனர். அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போயுள்ளது, எடப்பாடியின் பதவி டெம்ப்ரவரி பதவி தான் பொய் பிரச்சாரத்தை பற்றி கவலை வேண்டாம், அதனை பற்றி பேச நேரமில்லை மக்கள் பணியில. மட்டுமே கவனம் செலுத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையும் படியுங்கள்

சசிகலாவுடன் ஓபிஎஸ் அணியின் முதல் சந்திப்பு... அதிர்ச்சியில் இபிஎஸ்


 

Follow Us:
Download App:
  • android
  • ios