இந்தியா ஒற்றுமை 3 ஆம் நாள் பயணம்.. ராகுலை சந்தித்த வில்லேஜ் குக்கிங் யூடியூப்... என்ன பேசினார்கள் தெரியுமா..?
இந்தியா ஒற்றுமை நடைபயணத்தில் 3வது நாளான இன்று காலை நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் இருந்து ராகுல்காந்தி பயணத்தை தொடங்கினார், இன்று தக்கலை வரை பயணம் மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டது.
ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை பயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை 7ஆம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு தனது நடை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, 150 நாட்களில் 3500 கி.மீ தூரம் நடந்து செல்லத் திட்டமிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். நேற்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை கொட்டாரம் வழியாக மதியம் சுசீந்திரத்திற்கு சென்றது. அங்கு மதிய இடைவேளைக்குப் பின்பு, மாலையில் புறப்பட்டு இடலாக்குடி வழியாக இரவில் கோட்டார் சந்திப்பில் நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று காலை நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் 3வது நாள் நடை பயணத்தை தொடங்கினார், ராகுல். தக்கலை வரை இன்று பயணம் மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டது.
கோவையில் 90 அடி கிணற்றில் தலைக்குப்புற விழுந்த கார்...! நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி
ராகுலுடன் விவசாய அமைப்பு சந்திப்பு
இந்த பயணத்தின் போது தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் தமிழகத்தில் உள்ள விவசாய பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கையை தெரிவித்தார். மழை காலங்களில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பயிர் காப்பீடு தொடர்பாகவும் தங்கள் தரப்பு கோரிக்கையை தெரிவித்து இருந்தார். இதனை உன்னிப்பாக கவனித்த ராகுல் காந்தி உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்ச்சிகளையும் மேற்கொள்வேன் என உறுதி அளித்து இருந்தார். இதனையடுத்து வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியை சந்தித்தனர். ஏற்கனவே ராகுல்காந்தி தமிழகம் பயணம் வந்திருந்த போது வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்களோடு இணைந்து சமையல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் அதிக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
பொய்யை சொல்லி மாணவர்களை ஏமாற்றிய திமுக..! ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை- ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
ராகுலுடன் வில்லேஜ் குக்கிங் சேனல் சந்திப்பு
இந்தநிலையில் இன்றைய சந்திப்பின் போது ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைபயணத்திற்கு வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். மேலும் ஏற்கனவே யூடியூப் சேனலின் சமையல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ராகுல் காந்தி தற்போது எந்த வகையான புதிய உணவு சமைகத்துள்ளீர்கள் என வினவினார்.
இதே போல தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினரை ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை செய்தார். இன்று இரவு தக்கலையை அடையும் ராகுல் காந்தி பயணம் நாளை இரவு கேரளாவை அடையவுள்ளார். 11-ம் தேதி காலை கேரளாவில் பயணத்தை தொடர்கிறார். தினமும் 18 முதல் 20 கிலோ மீட்டர் வரை அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்