Asianet News TamilAsianet News Tamil

நயன்தாராவுக்கு சிக்கல்..! இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறல்..? சுகாதாரத்துறை தகவல்

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Minister Ma Subramanian informed that a report will be issued tomorrow evening regarding Nayanthara  twin child issue
Author
First Published Oct 25, 2022, 12:03 PM IST

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தததாக சமீபத்தில் அறிவித்தார் விக்னேஷ் சிவன். இது தொடர்பான புகைப்படத்தையும் இரண்டு பேரும் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றது தெரிய வந்தது. அதேசமயம் இவர்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றதாக சர்ச்சையும் எழுந்தது. இதனையடுத்து வாடகை தாய் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். வாடகை தாய் விவகாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது.

அதில் ஒரு தம்பதிக்காக வாடகைத் தாயாக இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண், குழந்தை பிறந்த பிறகு அவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். மகப்பேறின்மை பிரச்னை ஒரு தம்பதிக்கு இருந்தாலோ, அது தொடர்பான ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்படுகிறது. 

இரட்டை குழந்தைகளுடன் தல தீபாவளி கொண்டாடிய நயன் - விக்கி

Minister Ma Subramanian informed that a report will be issued tomorrow evening regarding Nayanthara  twin child issue

மருத்துவமனை விதி மீறல்

அதிலும் அவர்களுக்கு நெருங்கியவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும். அப்படி வாடகைத் தாயாக இருக்க முன்வருபவர், 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் பெற்றோராக விரும்பும் தம்பதிக்கு நெருக்கமான உறவினராகவும் இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த விதிகளை நயன்தாரா தம்பதிகள் மீறியதாக புகார் கூறப்பட்டது. இந்தநிலையில் வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை விசாரணை நடத்தவுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மருத்துவமனையின் நிர்வாகம் தரப்பில் விளக்கம் பெற்றவுடன் அறிக்கை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.. மேலும் மருத்துவமனை நிர்வாகம் விதிமுறை மீறி இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் மருத்துவமனை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. 

Tasmac Sale: தீபாவளி திருநாளில் மதுப் பிரியர்கள் உற்சாகம்.! எத்தனை கோடிக்கு விற்பனை.? எந்த மாவட்டம் முதலிடம் ?

Minister Ma Subramanian informed that a report will be issued tomorrow evening regarding Nayanthara  twin child issue

நாளை மாலை அறிக்கை

மருத்துவமனையின் விளக்கத்தை பொருத்து நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் விளக்கம் பெறப்பட்டு அறிக்கை வெளியாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு..! கோவை குண்டு வெடிப்பை நினைவுபடுத்துகிறது- ஓபிஎஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios