தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சூடான விவாதம் நடைபெற்றது. பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் கீதாஜீவன் பதிலளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டை முன்வைத்தார். 

வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுக்கு துரைமுருகன் பதில்

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உறுப்பினர் கூறுவது ஏற்புடையது இல்லை. வாரணாசியில் 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது போன்ற தவறுகள் எந்த ஆட்சியாக இருந்தாலும் நடக்கும். ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கிச் சென்றுவிட்டனர். எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கேட்டவர்களும் இருப்பார்கள். நடவடிக்கை என்ன என்றுதான் பார்க்க வேண்டும் என்று கூறினார். 

இதையும் படிங்க: ஸ்காட்லாந்து இணையான தமிழக போலீஸ் நிலை இப்படி ஆயிடுச்சே.! திமுக அரசை இறங்கி அடித்த எடப்பாடி

தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமே நான் பேசுகிறேன்

அப்போது பேசிய வானதி சீனிவாசன் எந்த குற்றச்சாட்டை வைத்தாலும் உடனே பாஜக ஆளும் மாநிலங்களுக்கு செல்கிறீர்கள். நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து தான் நான் பேசுகிறேன். தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டுமே நான் பேசுகிறேன் என்றார். 

இதையும் படிங்க: குடும்பத்திற்காகக்கூட்டணி வைத்த பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சிக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம

இதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் கீதாஜீவன், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. எந்த தவறு நடந்தாலும் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் புகார் அளிக்க காவல்துறைக்கு வருகிறார்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். கீதா ஜீவன் பதில் அளித்ததை பார்த்து அமைச்சர் துரைமுருகன், "சபாஷ்.. சரியான போட்டி.. என்று கூறினார்.