காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்.. மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.95 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 1.95 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 6 வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் காவரியின் துணைநதி  நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி ஆறு உள்ளிட்ட தமிழக முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Mettur dam water level today

நடப்பு அண்டில் இரண்டாவது முறையாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  நீர்வரத்து அதிகரிப்பால, அணையின் பாதுகாப்பு கருத்து அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. மேலும் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம், வைகை, பவானி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் வைகை அணையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:அந்தியூரில் தொடரும் கனமழை... நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1,95,000 கன அடி. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,95,000 கன அடி. அணை ஏற்கனவே முழு கொள்ளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 1,73,500 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆக உள்ளது.

மேலும் படிக்க:சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை.. 34 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios