சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை.. 34 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை..
தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 34 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும் படிக்க:Chennai Power Shutdown: மக்களே.. சென்னையில் இன்று இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை.!
நாளை மறுநாள்: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டிருந்த நிலையில், திருவள்ளூர்,சென்னை,காஞ்சிபுரம், வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், நெல்லை, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் உள்பட 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க:சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மூடல்.. எப்போது வரை தெரியுமா..?