ஒரு சட்டப்பேரவை தொகுதியில் கூட முதலிடம் பிடிக்க முடியல! பாஜகவின் பேசப்படாத சோகக் கதை!
பரிதாபத் தோல்வி அடைந்த பாஜக, எந்தத் தொகுதியிலும் வாக்கு சதவீதம் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் இதே சோகம் தான் பாஜகவினருக்கு நடந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், பாஜகவினரின் வேதனையை அதிகமாக்கும் புள்ளிவிவரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக கடைசி நேரத்தில் கழன்று கொண்டது. அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற அதிமுக தலைவர்கள் பற்றி அண்ணாமலை ஓவராகப் பேசிய நிலையில் வேறு வழி தெரியாமல் அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டது.
ஆனால் பாஜக மீண்டும் அதிமுகவை தங்கள் பக்கம் இழுக்க முக்கி முனகி போராடிப் பார்த்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் பாஜக ஏமாற்றம் அடைந்து, வேறு குட்டிக்குட்டி கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்தது. சரத்குமாரின் ச.ம.க.வை ஒரேயடியாக விழுங்கிவிட்டது.
பாஜக பக்கம் போவதா அதிமுக பக்கம் போவதா என்று அல்லாடிக் கொண்டிருந்த பாமகவை பாஜக வளைத்துப் போட்டது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாஜகவினர் சொல்லிக்கொண்டனர். ஆனால், கடைசியில் ஜூன் 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி தமிழகதிதன் அத்தனை தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது.
கொளுத்திப் போட்ட தமிழிசை! அண்ணாமலைக்கு ஆப்பு எப்போ? ரவுண்டு கட்டி அடிக்கும் மூத்த பாஜக நிர்வாகிகள்!
இந்நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதி வாரியாக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது. அதன்படி, 221 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது. அதிமுக 8 தொகுதிகள், பாமக 3 தொகுதிகள், தேமுதிக 2 தொகுதிகளளில் முதல் இடத்தைப் பெற்றன.
எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவும், பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில் பாமகவும், திருமங்கலம், அருப்புக்கோட்டை தொகுதிகளில் தேமுதிகவும் அதிக வாக்கு சதவீதம் பெற்றுள்ளன.
ஆனால், பரிதாபத் தோல்வி அடைந்த பாஜக, எந்தத் தொகுதியிலும் வாக்கு சதவீதம் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் இதே சோகம் தான் பாஜகவினருக்கு நடந்துள்ளது. மோடி பலமுறை தமிழ்நாட்டில் சுற்றிச்சுற்றி வந்தும் பாஜகவை தமிழக மக்கள் புறக்கணித்திருப்பதால் பாஜகவினர் வேதனையில் புழுங்கிக்கொண்டு இருக்கின்றனர்.
ஜெகன் கட்சியின் 15 எம்.பி.க்கள் பாஜகவுடன் இணைகிறார்களா? சந்திரபாபு நாயுடு இதை யோசிச்சாரா?