Asianet News TamilAsianet News Tamil

கொளுத்திப் போட்ட தமிழிசை! அண்ணாமலைக்கு ஆப்பு எப்போ? ரவுண்டு கட்டி அடிக்கும் மூத்த பாஜக நிர்வாகிகள்!

தமிழிசை இவ்வாறு கூறிய பிறகு அண்ணாமலைக்கு எதிராக மூத்த பாஜக தலைவர்கள் பலர் கருத்து தெரிவிக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக, பாஜக சிந்தனையாளர் பிரிவு பொறுப்பாளர் கல்யாணராமன் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்.

Senior BJP executives against Annamalai; Tamilisai, Kalyanaraman among others sgb
Author
First Published Jun 8, 2024, 12:47 PM IST | Last Updated Jun 8, 2024, 12:59 PM IST

மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மூத்த நிர்வாகிகள் பலர் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தராஜன், "உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

தமிழிசை இவ்வாறு கூறிய பிறகு அண்ணாமலைக்கு எதிராக மூத்த பாஜக தலைவர்கள் பலர் கருத்து தெரிவிக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக, பாஜக சிந்தனையாளர் பிரிவு பொறுப்பாளர் கல்யாணராமன் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்.

"தன்னிடம் கொஞ்சமும் தார்மீகம் உள்ள எந்த மனிதனும் இந்த தோல்விக்கு ராஜினாமா செய்வார் அல்லது குறைந்தபட்சம் ராஜினாமா செய்கிறேன் என்றாவது சொல்வார். ஆனால் அண்ணாமலைக்கு நேர்மை குறைவு என்பது எனக்குத் தெரியும்" என கல்யாண ராமன் கூறிருக்கிறார்.

ஜெகன் கட்சியின் 15 எம்.பி.க்கள் பாஜகவுடன் இணைகிறார்களா? சந்திரபாபு நாயுடு இதை யோசிச்சாரா?

அண்ணாமலை மலிவுவான மனப்பான்மை கொண்டவர் என்றும் முதிர்ச்சியற்ற அண்ணாமலை ஆணவத்துடன் சொந்தக் கட்சியினருக்கு எதிராகவே சூழ்ச்சிகள் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சிபிஆர், தமிழிசை, எல்.கணேசன் போன்றோருக்கு எங்காவது நீதி கிடைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தலைமையிலான வார்ரூம் குண்டர்களால் அவர்கள் அனைவரும் சிறுமைப்படுத்தப்பட்டனர் என்றும் சாடியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ அண்ணாமலையின் ஆதரவாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அண்ணாமலையால் தான், கே.டி.ராகவன், நடிகை காயத்ரி ரகுராம், எஸ்.வி.சேகர் போன்ற பல மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் கருகின்றனர். எஸ்.வி.சேகர் அண்ணாமலைக்கு எதிராக பகிரங்கமாகவே விமர்சனங்களைக் கூறிவருகிறார்.

காயத்ரி பாஜகவை கைகழுவி விட்டுவிட்டு அதிமுகவில் இணைந்துவிட்டார். அவரும் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். இப்போது மக்களவைத் தேர்தலிலும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளதால் அண்ணாமலை மீது அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர் என்று எஸ்.வி.சேகர் கூறுகிறார்.

சிலர் இன்னும் உச்ச கட்டத்துக்குப் போய் அண்ணாமலை தோல்வி அடைந்ததை கொண்டாடி இருக்கிறார்கள். குறிப்பாக, எஸ்.வி. சேகர் வீட்டின் மூன் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளார். அதை வீடியோ எடுத்து ட்விட்டரிலும் வெளியிட்டுள்ளார். இதனால் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து வருபவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வெறுப்பில் இருக்கிறார்கள்.

கங்கனாவின் கன்னத்தில் அறைந்த கான்ஸ்டபிளுக்கு வேலை! கேரண்டி கொடுத்த பாடகர் விஷால் தத்லானி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios