தமிழகத்தில் கள்ள உறவு மூலம் பிறக்கும் குழந்தைகள், வறுமை காரணமாக பெற்ற குழந்தைகளை வளர்க்க முடியாமை போன்ற பல காரணங்களால் அடிக்கடி பெற்ற தாயே தங்கள் குழந்தைகளை வீதியில் வீசிச் செல்லும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

குழந்தைகளை குப்பையிலும், வீதிகளிலும் சாக்கடைகளிலும் வீசிச் செல்லும் செய்திகள் நாம் அடிக்கடி காண முடியுறது. இத்தகைய குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை ஓசூர் உழவர் சந்தை அருகே ஒரு குழந்தையை  யாரோ ஒருவர் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஓசூர் உழவர் சந்தை அருகே சாலை ஓரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு சந்தையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அங்கு ஒரு அழகான குழந்தை இருத்நது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கிருந்த பெண்கள் சிலர் அந்த குழந்தையை எடுத்து பாதுகாத்து வந்தனர். மேலும் இரு குறித்து போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டு ஓசூர்  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அந்த குழந்தை காப்பகத்தில் விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அது யாருடைய குழந்தை என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.