கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாணவி மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், இரு ஆசிரியர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாணவி மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், இரு ஆசிரியர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலும் படிக்க:எல்லாருக்கும் எல்லாம்.. இதுவே திராவிட மாடல்.. மேடையில் மோடியை அதிரவைத்த முதல்வர் ஸ்டாலின்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மரண தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. முன்னதாக கடந்த ஜூன் 13 ஆம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் மாணவியின் பெற்றோர் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடர் போராங்களை நடத்தினர். மேலும் மாணவியின் தாயார் கொடுத்த புகாரில் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
மேலும் படிக்க:தமிழகத்தில் 2 வாரத்தில் 5 மாணவர்கள் தற்கொலை..! தலையில் அடித்து கதறும் ராமதாஸ்
இந்நிலையில் கட்ந்த 17 மாணவி மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நடத்தப்பட்ட முற்றுகை போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த கலவரத்தில் பள்ளி வாகனங்கள் , மாணவர்களின் அசல் சான்றிதழ்கள், மேஜை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் கலவரத்தை கட்டுபடுத்த முயன்ற போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பின்னர் அண்டை மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனிடையே கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 309 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், வேதியியல் ஆசிரியை, கணித ஆசிரியை ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். இன்று விசாரணைக்கு வந்த ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி, 5 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளார்.
மேலும் படிக்க:மீண்டும் கல்குவாரி விபத்து.. பாறைகள் சரிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி பலி.. ஆட்சியர் ஆய்வு
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால், அதன் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.