மீண்டும் கல்குவாரி விபத்து.. பாறைகள் சரிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி பலி.. ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் கல்குவாரியில் பாறை சரிந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாறைகள் சரிந்து இரண்டு தொழிலாளர்கள் பலியான கல்குவாரி மூடப்படும் என்று பெரம்பலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் கல்குவாரியில் பாறை சரிந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாறைகள் சரிந்து இரண்டு தொழிலாளர்கள் பலியான கல்குவாரி மூடப்படும் என்று பெரம்பலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் கனிமவள அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பர் என்று விபத்து நேரிட்ட கல்குவாரியை ஆய்வு செய்தபின் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் 10 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பணி செய்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக,குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது குவாரியில் பணியில் இருந்த இரு தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்துள்ளது. இதில் பாறையில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
மேலும் படிக்க:Temple: பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள தமிழக சதுரங்க வல்லபநாதர் கோவில்...சிறப்பு என்ன..? முழு விவரம் உள்ளே..
இந்நிலையில் கல்குவாரில் விபத்தில் உயிரிழந்த வினோத், சுப்ரமணி ஆகிய இருவரும் கவுள்பாளையத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் உயிரிழந்த இருவர்களின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த மற்ற தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து நடத்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் விபத்து நடந்த கல்குவாரி பெரம்பலூர் அதிமுக ஒன்றிய செயலாளருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
பாறைகள் சரிந்து இரண்டு தொழிலாளர்கள் பலியான கல்குவாரி மூடப்படும் என்று பெரம்பலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் கனிமவள அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பர் என்று விபத்து நேரிட்ட கல்குவாரியை ஆய்வு செய்தபின் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த மே மாதம் 14 ஆம் தேதி நெல்லையில் அடைமிதிப்பங்குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து நடந்த விபத்தில், 300 அடி பள்ளத்தில் 6 பேர் சிக்கிக்கொண்டனர். 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பாறையில் இடிபாடுகளில் சிக்கி மீதமுள்ள 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படிக்க:புத்தக திருவிழாவில் காவி நிறத்தில் திருவள்ளூவர்..! காவி நிறம் ஏன்..?சர்ச்சைக்கு கோவை ஆட்சியரின் அசத்தல் பதில்