எல்லாருக்கும் எல்லாம்.. இதுவே திராவிட மாடல்.. மேடையில் மோடியை அதிரவைத்த முதல்வர் ஸ்டாலின்.!
அண்ணாவின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் இது எனக் குறிப்பிட்ட அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர் அண்ணா பேசிய வரிகளை நினைவுகூருகிறேன் எனக் கூறி, பட்டத்துடன் படிப்பு முடிந்துவிடுவதில்லை, பட்டங்கள் வேலைவாய்ப்புக்கானது அல்ல, அறிவாற்றலை மேம்படுத்துவதற்கானது என தெரிவித்தார்.
சாதி, மதம், பதவி, அனுபவம் ஆகிய அனைத்தின் தன்மையும் வேறுபடும். அறிவு மட்டுமே ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள அண்ணா பல்கலைக்கழக 42வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்;- செஸ் ஓலிம்பியாட் நேற்று தொடக்கி வைத்த பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் ஒரு முறை நன்றி. பட்டங்கள் என்பவை வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. அறிவினை பெருக்குவதற்கும் தான். பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்றுள்ளது இன்று பட்டம் பெறும் மாணவர்களுக்கு கிடைத்த பெருமை.
இதையும் படிங்க;- செஸ் ஒலிம்பியாட் செலவு தமிழக அரசின் நிதியா.? அப்போ தடுப்பூசி யாருடைய செலவு.? திமுகவினருக்கு பாஜக கேள்வி!
அனைத்து விதமான தொழில்துறையிலும் சிறந்தவர்கள் தமிழர்கள். கல்வி என்பது யாராலும் களவாட முடியாத சொத்து. அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கியே தமது பயணம். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தேசிய உயர்கல்வி நிறுவங்கள் தரவரிசை பட்டியலில் மிக பெருவாரியானவை தமிழ்நாட்டை சேர்ந்தவை.
அனைவருக்கும் உயர்கல்வி ஆராய்ச்சிக் கல்வி இலக்குடன் தமிழக அரசு செயல்படுகிறது. தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டிலில் ஒரே ஆண்டில் 3வது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. எங்கள் கனவுகளை மட்டுமல்ல, உங்களது பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றுங்கள் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ்- இபிஎஸ் இல்லாமல் ஆலோசித்த மோடி ..! அதிமுக உட்கட்சி விவகாரங்களை புட்டு புட்டு வைத்த பாஜக நிர்வாகிகள்
அண்ணாவின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் இது எனக் குறிப்பிட்ட அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர் அண்ணா பேசிய வரிகளை நினைவுகூருகிறேன் எனக் கூறி, பட்டத்துடன் படிப்பு முடிந்துவிடுவதில்லை, பட்டங்கள் வேலைவாய்ப்புக்கானது அல்ல, அறிவாற்றலை மேம்படுத்துவதற்கானது என தெரிவித்தார். அறிவாற்றல் தான் அனைத்திலும் வலிமையானது. சாதி, மதம், பதவி, அனுபவம் ஆகிய அனைத்தின் தன்மையும் வேறுபடும். அறிவு மட்டுமே ஒரே அளவுகோலில் வைத்துப் பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், கல்விக்கண்ணைத் திறப்பதைப் பெரும்பணியாக எண்ணியே திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறதுது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் எனக் கூறினார்.