தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு..
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
தற்காலிக ஆசியர் நியமனம்:
தமிழகத்தில் அரசுப்பள்ளியில் காலியாக உள்ள 1,331 பணியிடங்களுக்கு அந்தெந்த பள்ளிக்கு அருகே தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யுமாறு பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் நிரந்தர பணியிடங்களுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:சர்ச்சையாகும் தற்காலிக ஆசிரியர் நியமனம்.. மொட்டை அடித்து போராட்டத்தில் ஆசிரியர்கள்.. அரசு எடுத்த அதிரடி முடிவு
மேலும் படிக்க:அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆபத்தானது.. உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..
மேலும் படிக்க:தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்த உத்தரவு.. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னூரிமை..
மதுரை கிளையில் வழக்கு:
இந்நிலையில் அரசின் இந்த முடிவை திரும்ப பெறக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தகுதியற்ற தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பது ஆபத்தானது என்று கருத்து தெரிவித்தார். மேலும் இதுக்குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, இன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இடைக்கால தடை விதித்து உத்தரவு:
முன்னதாக தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடத்ததாக புகார் எழுந்த நிலையில் , நியமனத்தை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.