சர்ச்சையாகும் தற்காலிக ஆசிரியர் நியமனம்.. மொட்டை அடித்து போராட்டத்தில் ஆசிரியர்கள்.. அரசு எடுத்த அதிரடி முடிவு

தற்காலிக ஆசிரியர்கள்‌ நியமனத்தில்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற நபர்கள்‌ மற்றும்‌ இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்‌ என்ற விரிவான தெளிவுரைகள்‌ வழங்கப்படும்‌ வரை தற்காலிக ஆசிரியர்‌ பணியிடத்தை நிரப்பக்‌ கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Order to stop the appointment of a temporary teacher-  Department of school Education

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்‌ கல்வித்துறை அண்மையில் அனுமதி அளித்தது. தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் சென்னை டிபிஐ வளாகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில்‌ சிலர் நேற்று மொட்டை அடித்து போராட்டத்தில்‌ ஈடுபட்டனர்‌.

 

மேலும் படிக்க:அங்கன்வாடி மையங்களில் LKG , UKG மாணவர் சேர்க்கை எப்போது..? அறிவித்தது தொடக்க கல்வி இயக்குநரகம்..

மேலும் படிக்க:அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆபத்தானது.. உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..

மேலும் படிக்க:தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்த உத்தரவு.. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னூரிமை..

அரசின் இந்த முடிவினை திரும்ப பெற வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இடைக்கால ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தகுதியற்ற தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பது ஆபத்தானது என்று கருத்து தெரிவித்தது. மேலும் இதுக்குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்க செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.பல்வேறு மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடத்ததாக புகார் எழுந்த நிலையில் ,  நியமனத்தை நிறுத்த வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தற்காலிக ஆசிரியர்கள்‌ நியமனத்தில்‌ ஆசிரியர்‌ தகுதி தேர்வு பெற்றவர்கள்‌, இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்‌. இந்த முன்னுரிமைகள்‌ எதனையும்‌ பின்பற்றாமல்‌ தங்களது விருப்பப்படி ஆசிரியர்‌ நியமனம்‌ செய்யப்படுவதாக தகவல்கள்‌ வருகின்றன. ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற நபர்கள்‌ மற்றும்‌ இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்‌ என்ற விரிவான தெளிவுரைகள்‌ வழங்கப்படும்‌ வரை தற்காலிக ஆசிரியர்‌ பணியிடத்தை நிரப்பக்‌ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்த தெளிவுரைகள்‌ விரைவில்‌ அனுப்பி வைக்கப்படஉள்ளன. அதற்குப்‌ பிறகு உரிய முன்னுரிமைகளை பின்பற்றி தகுதியுள்ள அனைவருக்கும்‌ வாய்ப்பளித்து தற்காலிக ஆசிரியர்‌ பணி நியமனம்‌ செய்யப்பட வேண்டும்‌ என உத்தரவிடப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios