அங்கன்வாடி மையங்களில் LKG , UKG மாணவர் சேர்க்கை எப்போது..? அறிவித்தது தொடக்க கல்வி இயக்குநரகம்..
தமிழகத்திலுள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி க்கு மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. LKG , UKGக்கு மாணவர் சேர்க்கை துவங்கவில்லை என புகார் எழுந்த நிலையில், தொடக்ககல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி க்கு மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. LKG , UKGக்கு மாணவர் சேர்க்கை துவங்கவில்லை என புகார் எழுந்த நிலையில், தொடக்ககல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 3 வயது குழந்தைகளை எல்.கே.ஜி-யிலும், 4 மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளை யுகேஜி-யிலும் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:LKG - UKG விவகாரம்.. திடீர் பல்டி அடித்த அமைச்சர்.. நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர் கூட்டணி..
மேலும் படிக்க:அரசுப்பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி கிடையாது..அதிரடிஅறிவிப்பிற்கு காரணம் இதுதான்..பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
மேலும் படிக்க:அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடரும்.. அறிவிப்பை திரும்ப பெற்ற அமைச்சர்..
முன்னதாக அரசுப்பள்ளிகளில் இனி எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் செயல்படாது என்றும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு மாற்றப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டுமென்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை எடுக்கும் இடைநிலை ஆசிரியர்களால் மழலையர் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இனி அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, மழலையர் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மையம் மூலமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இதனால் அரசின் இந்த முடிவு திரும்ப பெறப்பட்டு அரசுப்பள்ளிகளில் வழக்கம் போல் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்பு நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இந்நிலையில் அங்கன்வாடி மையங்களில் LKG , UKGக்கு மாணவர் சேர்க்கை துவங்கவில்லை என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தற்போது, தமிழகத்திலுள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி க்கு மாணவர் சேர்க்கை நடத்த தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி, 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.