தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்த உத்தரவு.. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னூரிமை..
இடைக்கால ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யும் உத்தரவை பல்வேறு மாவட்டங்களில் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்கால ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யும் உத்தரவை பல்வேறு மாவட்டங்களில் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறையானது, பள்ளி மேலாண்மை குழுவுக்கு தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 13,331 காலிப் பணியிடங்களை, அந்தந்த பள்ளிகள் அருகில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமித்துக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதில் இடைநிலை ஆசிரியர்களை ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான 10 மாதங்களுக்குள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை ஜூலை 2022 தொடங்கி பிப்ரவரி 2023 வரையிலான எட்டு மாதங்களுக்குள் நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் படிக்க:நரிக்குறவர் வீட்டிற்கு சென்றதால் நான் விளம்பர பிரியனா? எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
மேலும் படிக்க:மீண்டும் திமுகவில் இணைகிறாரா பாஜக முக்கிய நிர்வாகி சரவணன்..! அவரே சொன்ன பரபரப்பு தகவல்
மேலும் படிக்க:திடீர் விசிட் சென்ற முதலமைச்சர்.. பணியில் இல்லாமல் இருந்த அதிகாரி சஸ்பெண்ட்.. அடுத்து நடந்தது என்ன..?
அதன்படி 4,989 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடமும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடமும் 3,188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் என மொத்தம் 13,331 பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது. இவ்வாறு நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 என மதிப்பூதியம் வழங்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்தது.
மேலும் இந்த பணியிடங்களில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது, இவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இடைக்கால ஆசிரியர் நியமனத்துக்கான உத்தரவில், ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரு பணியிடத்தை நாடும்போதும் மட்டுமே, டெட் தேர்ச்சி பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலருக்கு முன்னுரிமை தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் டெட் தேர்வி தேர்ச்சி பெற்று, நிரந்தர பணி நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள், அரசின் இந்த முடிவால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் தற்காலிக பனிநியமனம் உத்தரவை திரும்ப பெறவேண்டுமென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இடைக்கால ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யும் உத்தரவை பல்வேறு மாவட்டங்களில் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.