நரிக்குறவர் வீட்டிற்கு சென்றதால் நான் விளம்பர பிரியனா? எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
தான் விளம்பர பிரியன் என எதிர்கட்சிகள் கூறி வருவதாகவும், 55 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் உள்ளவன் நான் இதற்கு மேல் எனக்கு விளம்பரம் எதற்க்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
80% தேர்தல் வாக்குறுதி நிறைவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரக வளாகத்தினை திறந்து வைத்தும், இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை என்பதை விட காந்தி பேட்டை என்று சொன்னால் கூட பொருத்தமாக இருக்கும், அமைச்சர் காந்தி என்றால் கலகலப்பு என்று பொருள், அந்த அளவிற்கு, தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்திருப்பார். அதேநேரத்தில் அமைச்சர் காந்தி பேசி இருக்கக்கூடிய தமிழ் இருக்கிறதே, மிகவும் அழகாக இருக்கும், மழலை தமிழில் பேசுவார்.ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் பேசுகின்ற தமிழாகவே இருக்கும் என கூறினார். தொடர்ந்து பேசியவர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் செய்து கொண்டிருக்கின்ற பணிகளையும் நிறைவுற்ற பணிகளையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அப்போது பட்டியலிட்டார்.திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய 70 முதல் 80 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், இதன் காரணமாகத்தான் பொதுமக்கள் முன்பு கம்பீரமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டார். திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என எதிர்கட்சி உள்ளவர்கள் உதிரி கட்சி சேர்ந்தவர்கள் அடுத்த முதல்வர்கள் நாங்கள் தான் என்று கூறிக் கொள்வீர்கள் கூறி வருகிறார்கள்.
இபிஎஸ் பிடிவாதத்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாத அதிமுக..? அதிர்ச்சியில் நிர்வாகிகள்
நான் விளம்பர பிரியனா?
திமுக செயல்படுத்திய வாக்குறுதிகளை பட்டியலிட்டு வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பது போல எதிர்க்கட்சிகள் பேசிக்கொண்டு வருகிறார்கள். ஸ்டாலின் விளம்பர பிரியராக இருப்பராக கூறுகிறார்கள், எனக்கு எதுக்கு விளம்பரம், இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா 55 ஆண்டுகாலம் அரசியல் இருக்கக் கூடியவன் நான்இதற்கு மேல் எதற்கு எனக்கு விளம்பரம், நரிக்குறவர் வீட்டிற்கு போனார், இருளர் வீட்டிற்கு போனார், அந்த வீட்டில் போய் ஸ்டாலின் சாப்பிட்டார் என்று வருகிற செய்தியை பார்த்து அப்படி எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள்.இருளர்,நரிக்குறவர் வீட்டிற்கு சென்றதற்கு பின்னால் எத்தனை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நரிக்குறவர் வீட்டுக்குள்ள வீட்டுக்கும் சென்றதன் மூலமாக இது நமது ஆட்சி எனஅவர்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு நாள் மட்டும் சென்றதால் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து அத்துடன் நான் சும்மா இருந்துவிடவில்லை, தேர்தலுக்கு முன்பாக ஏராளமானோர் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் தங்களது மனுக்களை என்னிடம் கொடுத்தனர். அதில் ஒரு சிலர் மேடையில் பேசினார்கள். அப்போது நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்களும் பேசினார்கள் அவர்களது கோரிக்கையும் ஏற்று தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது, இன்று கூட 293 நரிக்குறவர் இன மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது.
பெயரை காப்பாற்றினால் போதும்
அரசோட இதயம் என்பது விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில் தான் உள்ளது. எதையும் விளம்பரத்திற்காக செய்யப்படுவது இல்லை கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் புத்தகப் பையில் முதலமைச்சர் புகைப்படத்தை பதிவு செய்தனர். இந்த ஆண்டு புத்தக பையை மாணவர்களுக்க கொடுக்க கூடிய நிலையில் அந்த பையை கொடுக்க வேண்டாம் என அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்தனர். இருந்த போதும், அவர்கள் கூறிய படி பயன்படுத்தாமல் சென்றால் 17 கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே முந்தைய முதலமைச்சர் புகைப்படம் இருந்தால் பரவாயில்லையென கூறி அந்த பைகளை வழங்கினோம். எனவே எனக்கு விளம்பரம் தேவையில்லை, ஏற்கனவே கிடைத்த புகழையும் பெயரையும் காலம் முழுதும் காப்பாற்றினால் போதும் என்று நினைக்கிறேன். திராவிட மாடல் என்று சொன்னால் காலம் முழுவதும் மு க ஸ்டாலின் முகம் தான் நினைவுக்கு வரும், இந்தியாவை மாநிலங்களில் ஒன்றியம் என்று சொன்னால் ஸ்டாலின் குரல் தான் நினைவுக்கு வரும், 27% இட ஒதுக்கீடு இந்தியா முழுவதும் கொண்டு சென்றது யார் என்றால் எனது முகம் தான் நினைவுக்கு வரும். அனைத்து ஜாதியினாலும் அர்ச்சாராகலாம் என்பது யார் ஆட்சி காலத்தில் அமலானது என்று கேட்டால் எனது முகம் தான் நினைவுக்கு வரும் எனவே இது போன்ற பெயரே எனக்கு போதும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
மீண்டும் திமுகவில் இணைகிறாரா பாஜக முக்கிய நிர்வாகி சரவணன்..! அவரே சொன்ன பரபரப்பு தகவல்