Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

high court orders action in the death case of Kallakurichi student srimathi
Author
First Published Sep 27, 2022, 6:58 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை விடுதி வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என கூறப்படுகிறது. அவரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் முன்னதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவானது.  இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசரணையின்போது, மாணவி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை சரியில்லை என்றும் அவரது தாய் தொடர்ந்து குற்றச் சாட்டுக்களை கூறி வருகிறார்.

high court orders action in the death case of Kallakurichi student srimathi

இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடி  விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என்று நீதிபதி மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர் தரப்பில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து வருகிறது. காவல் நிலைய விசாரணை மட்டுமல்லாமல், சிபிசிஐடி விசாரணை, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

அதையும் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக பிரேத பரிசோதனை தொடர்பாக அறிக்கைகள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அதை வழங்கும் வரை இந்த வழக்கை முடித்து வைக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பை மாணவியின்  பெற்றோர்களான தாய், தந்தை இருவரும் தர வழங்கவில்லை. டிஎன்ஏ பரிசோதனைக்கு மாதிரிகளை வழங்க மறுக்கிறார்கள்.

இதையும் படிங்க..டியூசன் மாணவிகளுக்கு இரவு நேரத்தில் ஆபாச மெசேஜ்.. சேட்டை செய்த பிடி வாத்தியாரை அலேக்காக தூக்கிய போலீஸ் !

high court orders action in the death case of Kallakurichi student srimathi

மாணவி பயன்படுத்திய செல்போனை வழங்க மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இதையடுத்து, மாணவி பயன்படுத்திய மொபைல் போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று, மாணவி மரண வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடி-க்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க..“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!

Follow Us:
Download App:
  • android
  • ios