“Boy Friends வாடகைக்கு கிடைக்கும்.. Love Failure பெண்களுக்கு மட்டும்” - பெங்களுருவில் வினோத சம்பவம்!
பெங்களூரில் பாய் ப்ரென்ட்களை வாடகைக்கு எடுக்கும் டாய் பாய் (ToyBoy) எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. அதுவும் பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் வகிப்பது காதல் தான். பெரும்பாலான இளைஞர்கள் வாழ்க்கையில், இந்தக் காதலுக்கென்று தனிப்பட்ட ஒரு இடம் உண்டு. அப்படி இந்த காதலில் தோற்றுப் போனால், ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தவறான முடிவை தேடி கொள்கின்றனர்.
இதையும் படிங்க..சுற்றுச்சூழல் அனுமதி விதியில் இருந்து ஈஷாவுக்கு விலக்கு.. மத்திய அரசு சொன்ன புது தகவல் !
நாம் தனிமையாக உணர்ந்தால் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டிருந்தால் நாம் முதலில் தேடுவதும் நண்பர்களைதான். அவர்களுடன் வெளியே சென்று ஊர் சுற்றிவிட்டு வந்தால் நாம் சற்று லேசாக உணர்வோம். இப்படிப்பட்ட தற்காலிக நண்பர்களை தருகிறது பெங்களூருவை சேர்ந்த போர்ட்டல் நிறுவனம் ஒன்று.
பெங்களூரில் பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் டாய்பாய் எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில் மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் இந்த போர்ட்டல் மூலம் புக் செய்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு டாய்பாய் போர்ட்டலுக்கான ஏபிகே பைலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?
இந்த பயன்பாடு கூகுள் பிளே ஸ்டோர் (Google Play store) இல் கிடைக்கவில்லை. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் இந்த போர்ட்டலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க..டியூசன் மாணவிகளுக்கு இரவு நேரத்தில் ஆபாச மெசேஜ்.. சேட்டை செய்த பிடி வாத்தியாரை அலேக்காக தூக்கிய போலீஸ் !