புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?
புதுச்சேரியில் கூட்டணி தர்மத்தை மீறி முதலமைச்சரை மாற்றக்கோரிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள பாஜக எம்.எல்.ஏக்களின் தொகுதிகளை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பதாகவும், பாஜகவிற்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்.எல்.ஏக்களை முதல்வர் ரங்கசாமி அலட்சியப்படுத்தி பழிவாங்குவதாக கூறி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன் சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்கள் முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினர். மேலும் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளனை சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சென்று ஆளுநரை சந்தித்து முறையிட்டதை தொடர்ந்து, மாலை உண்ணாவிரத போராட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் முடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க..‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்கிறார்களா பெண்கள்.. இதுதான் திராவிட மாடலா? கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!
ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்களின் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்டணியில் இருந்துக்கொண்டு முதலமைச்சரை பதவி விலகக்கோரிய பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கூட்டணியில் இருந்துக்கொண்டே பாஜகவினர் விமர்சனம் செய்வதை முதலமைச்சர் கண்டிக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்துகொண்டே முதலமைச்சரைப் பற்றி அவதூறாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டிக்கின்றோம்.
இதையும் படிங்க..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?
எந்த நிலையிலும் எங்கள் கட்சியின் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார். மேலும் நாளை சபாநாயகர் வந்தவுடன் அவருடனும் மற்றும் உள்துறை அமைச்சர் மற்றம் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசிய முதலமைச்சருக்கு எதிராக இதுபோன்று நடப்பது தவறானது என பேசி முடிவெடுக்கபப்டும் என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியை மாற்றக்கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..‘சட்ட ஒழுங்கு சீர்கேடு : முதல்வர் தான் காரணம்.. அவங்க கூட ஸ்டாலின் கூட்டு’ - கடுப்பான அர்ஜுன் சம்பத்.!