‘சட்ட ஒழுங்கு சீர்கேடு : முதல்வர் தான் காரணம்.. அவங்க கூட ஸ்டாலின் கூட்டு’ - கடுப்பான அர்ஜுன் சம்பத்.!
கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர்.
கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டது. கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக் கடை, பொள்ளாச்சியில் எனப் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
கோவையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவையை தொடர்ந்து ஈரோடு,மதுரை,சென்னை என பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது. தமிழகத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?
பொள்ளாச்சியில் உள்ள பாஜக அமைப்பு சாரா பிரிவின் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ் வீட்டுக்கு நேற்றிரவு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பொன்ராஜின் காரை பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், 'தமிழகத்தில் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும்.
என்ஐஏ சோதனை என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இந்த சோதனையின் எதிரொலியாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தப்பட்டுள்ளன.பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்வினை ஆற்றவில்லை. இதன் மூலம் பிஎஃப்ஐ அமைப்பின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..‘ஊழலை நிரூபிச்சு காட்டுங்க பிடிஆர்.. அரசியலில் இருந்து விலக தயார்’ - மாஸ் காட்டிய செல்லூர் ராஜு !
தமிழக போலீஸாரின் திறமை மதிக்கத்தக்கது. வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ ஆகியவற்றுடன் அரசியல் ரீதியாக ரகசிய உறவு வைத்துள்ளது. அதை துண்டித்துக் கொள்ள வேண்டும். வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அரசியல், ஜாதி, மதம் இதற்கு அப்பாற்பட்டு தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதற்கு முக்கிய காரணம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்தான் என நான் குற்றம் சாட்டுகிறேன். இந்த வன்முறை சம்பவத்தை இதுவரை கண்டிக்கவில்லை. இதுதான் அரசியல் நாகரீகமா? இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறினார்.
இதையும் படிங்க..‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்கிறார்களா பெண்கள்.. இதுதான் திராவிட மாடலா? கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!