தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடையை பிற்பகல் 2 மணிக்கு திறந்தால் என்ன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  தற்போது 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணிக்கு அரசு திறக்கலாமா என அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். டாஸ்மாக் கடையை தாமதமாக திறப்பதில் என்ன கொள்ளை முடிவு எடுக்க வேண்டிய உள்ளது என நீதிபதிகள் வினவியுள்ளனர். டாஸ்மாக் கடையை தாமதமாக திறப்பது பற்றி அரசு பதில்தர உத்தரவிட்டு வழக்கை 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அரசு வழக்கறிஞர் பதில் 

டாஸ்மாக் கடையை எத்தனை மணிக்கு திறக்க வேண்டும் என்பது அரசின் கொள்ளை முடிவு என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. டாஸ்மாக் திறப்பதில் என்ன கொள்கை முடிவு என்ற நீதிபதி ஒருவாரத்தில் பதில் தர ஆணை பிறப்பித்துள்ளார். 

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் பார்களில் தரமான உணவுப்பொருள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும். பார்களில் தரப்படும் உணவுப்பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் பார்கள் உணவுப்பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். உணவுப்பாதுகாப்பு உரிமம் பெறாத பார்கள் 7 நாளில் மூடப்படவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.