சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தஞ்சாவூர் மதுரை கடலூர் பெரம்பலூர் அரியலூர் விழுப்புரம் திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது உள்ள வெப்பநிலையை விட குறைந்த பட்சம் 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை செல்சியஸ் உயர்ந்து காணப்படும், என்றும் சென்னையைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் வெப்பசலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அதன்படி பார்த்தால், நாகப்பட்டினம் தஞ்சாவூர் சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் மதுரை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்துவரும் இரண்டு நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டும் லேசான மழை பெய்ய கூட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை போன்று கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் 5 சென்டி மீட்டர் மழை பதவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல்