Asianet News TamilAsianet News Tamil

உஷார் !! சென்னையில் கனமழை.. இன்று 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
 

Heavy Rain in 12 districts - Weather Update
Author
First Published Oct 6, 2022, 2:34 PM IST

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக,

06.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மயிலாடுதுறை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலார்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி,
காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

07.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணஒரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:சூர்யா சிவாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி கவுரவித்த நித்யானந்தா.! எதற்காக விருது தெரியுமா.?

08.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்‌சி, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

10.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:குலசையில் முத்தாரம்மன் சூரனை வதம் செய்த அற்புத காட்சி

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சி‌யஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

 06.10.2022: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ வட தமிழக கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

08.10.2022: தென்‌ கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

06.10.2022 முதல்‌ 10.10.2022 வரை : குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ தெற்கு இலங்கையை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ஒன்றிய அரசு ஒன் சைடு கேம் விளையாடுகிறது - PTR குற்றச்சாட்டு

Follow Us:
Download App:
  • android
  • ios