தமிழகத்தில் இன்று முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பரவலான மழை பெய்துவருகிறது. 

இந்நிலையில் இன்றுமுதல் வட தமிழக மாவட்டங்களில், வட தமிழக உள் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாகும்.. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கூடுதல் மழை.. வானிலை மையம்

இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, கடலூர்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, வட தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் கனமழை தொடங்கியது.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. வானிலை அப்டேட்